பக்கம் எண் :

என
 

தமிழ் மொழி வரலாறு

287

என்னுடன் பணிபுரியும் திரு P. C. கணேசசுந்தரத்தின் தமிழ் மெய்யொலிகள் பற்றிய ‘ஒலிச்சிறப்புக் கூறு’ ஆய்வை, அவர் இசைவுடன் பின்னிணைப்பில் தந்துள்ளேன்.

3. உருபனியல்

i. வினை

வினையெச்சம், பெயரெச்சம், வினைமுற்றுக்கள் முதலியவற்றின் இறந்தகால வினைவிகற்பங்களில் - பின்வரும் சில மாற்றங்கள் நீங்கலாக - மாற்றமெதுவும் இல்லை. இவற்றிலெல்லாம் நெடிலுயிருடன் கூடிய இறுதி உருபன் ஒரே மாதிரியாக ஏற்கப்படுகிறது.

வினைவிகற்பங்கள்

அ. இறந்தகாலம்

1.

[செய்தான்] ணு செய்தா1 ¥ சேசா’ ~ சேஞ்சா1

(பிராமணர்

கிளைமொழி)

2.

கொண்டா1 [ள் + த் > ண்ட்] “கொண்டான்”

(இதுமிகவும்அரிதாக

வழங்குகிறது)

3.

நின்னா1 [ன்ற் > ன்ன்] ணு நிண்ணா1 [ன்ற் > ண்ண்]

“நின்றான்”

4.

அறிஞ்சா1 [ந்த் > ஞ்ச் (இகரத்திற்குப் பின்னர்)]
பாஞ்சா1 [ய்ந்த் > ஞ்ச்]
சேர்ந்தா1 ~ சேந்த’ [ர்ந்த் > ந்த்]

“அறிந்தான்”
“பாய்ந்தான்”
“சேர்ந்தான்”

5.

ஒடுங்க்னா1 ~ ஒடுங்கினா’ [இ ணு இன் ~ ன்]
ஒடுங்கி’ என்பது செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகும்.

6.

நட்டா1 இட்டா1 ~ இத்தா1 [9 அல்லது 11 ஆவது வினை விகற்பத்திலும் வரலாம்]

7.

உண்டா1 [த் > ட்]

(அருகிய

வழக்கு)

8.

தின்னா1 [த் > ன்]

“தின்னான்”

9.

கேட்டா1 [ள் + ட் > ட்ட்]

“கேட்டான்”

10.

விற்றா1 [ல்த் > ற்ற் > த்த்]

“விற்றான்”

11.

பார்த்தா1 ~ பாத்தா1 [ர்த்த் > த்த்]
முடிச்சா1 [இகரத்திற்குப் பின்னர், த்த் > ச்ச்]

“பார்த்தான்”
“முடிச்சான்”