|
தமிழ் மொழி வரலாறு 288
இழக்கப் படுவதைப்
பொது விதியாகக் கொள்ளலாம். இறந்தகாலம் காட்டும் இடைநிலைகளாகப் பினவருவனவற்றை
வகைப்படுத்தலாம்.
1. த்
~
ச்; த்த்
~
ச்ச்
2. ந்த்
~
ஞ்ச்
3. ண்ட்
4. ன்ன்
5. இ
~
இன்
~
ன்
முதலாவது
வினைவிகற்ப வாய்பாட்டைச் சேர்ந்த வினைகளின் உயிர்கள் நீட்சியுற, அவை நான்காவது வினை
விகற்ப வாய்பாட்டுக்குரியனவாகின்றன.
சான்று :
சேஞ்சா1 (cenja:1)
“செய்தான்”
நேஞ்சா1 (nenja:1)
“நெய்தான்”
பேஞ்சா1 (penja1)
“பெய்தான்”
கண்டா1
(கண்டான்), மொண்டா1 (மொண்டான்) என்பன போன்ற மிகச் சில வடிவங்களே
கிளைமொழிகளில் இரண்டாவது வினைவிகற்ப வாய்பாட்டினவாக வருகின்றன. இதைப் போலவே ஆறாவது
வினைவிகற்ப வாய்பாட்டிற்கு உரியனவும் மிகக் குறைவாகும். இவற்றை ஒன்பதாவது அல்லது
பதினோராவது வினைவிகற்ப வாய்பாடுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். ஏழாவது வினைவிகற்ப
வாய்பாடும் மிகவும் அருகியே வருகிறது. ஒன்பதாவது வினைவிகற்ப வாய்பாட்டின் இறுதியான
துகரமும், பதினோராவது வினைவிகற்ப வாய்பாட்டின் இறுதியான றுகரமும் மறைந்து விட்டன.
விதிவிலக்காய் வருபவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவாயிருப்பதால் அவற்றை இங்கு
விளக்கலாம். துணைவினை என்ற முறையில் ‘கொண்டு’ என்பது, கீழே விளக்கப்படும் மாற்றங்கட்கு
உள்ளாகின்றது.
1. கொண்டு > கொணு >
க்’ ணு ¥
க்’னு
சான்று :
“எடுத்துக்’ணு”
2. கொண்டு > கொடு >
க்’ டு
சான்று :
“எடுத்துக்’டு”
இங்ஙனமாயின்,
உண்மையில் இரு வினைவிகற்ப வாய்பாடுகளே உண்டு.
1. “மெய் உயிர் மெய்
உயிர்” என்னும் வாய்பாடுடைய வேரின் இறுதி உயிரான உகரம் மறைகிறது. ளகர மெய்யில் முடியும்
|