பக்கம் எண் :

New Page 2
 

தமிழ் மொழி வரலாறு

289

வேர் இறந்த காலத்தில் அவ்வேரை இழக்கிறது; அது பிறவிடங்களில் நெடில் நுனிநா பல்லொலியாக உள்ளது. இந்நிலையில் நுனிநா பல் வெடிப்பொலி நெடில் நாவளை வெடிப்பொலியாகிறது. [த் < ட்ட்] இகரத்தில் முடியும் வேர்களை அடுத்து இரட்டித்த நுனிநா பல்லொலி இரட்டித்த இடையண்ணவொலியாகிறது. ‘திரிச்சான்’ என்பதைச் சான்றாகக் காட்டலாம். இரட்டித்த வெடிப்பொலியை ஈரொலிகள் எனக் கொண்டால், முதலிலுள்ள வெடிப்பொலி இன மூக்கொலியாவதுண்டு. இவ்வொலிகளில் மூக்கொலியாகும் முதலாவது ஒலியைச் சகர உருபொலியன் எனக் கொள்ளலாம்; அல்லது இரண்டாவது அசைக்கு ஒத்த வெடிப்பொலி எனக் கொள்ளலாம். இவற்றை முதல் பிரிவாகக் கொள்ளலாம். மூக்கொலி அல்லது பூஜ்யத்தை (ழூ) தன்வினை விகுதியாகக் கொள்ளலாம். விதிவிலக்குகளையும் விளக்கலாம். இவற்றையும் முதற்பிரிவோடு சேர்த்துக் கொள்ளலாம்.

2. இரண்டாவது பிரிவு “ன்ன் ¥ இன் ணு ன் இ” என்னும் இறந்த கால மாற்றுருபுகளைப் பெறுகின்றன. 1) வேரின் இறுதியில் ன் அல்லது னு வந்தால் [தின் -, தின்னு] ஈற்றில் உள்ள ன் அல்லது னு என்பது மறைந்ததாகக் கொள்ளப்படும். 2) குற்றிய லுகரத்தில் முடியும் வேர்களைப் பொறுத்த வரையில், வினையெச்சத்தின் இறுதியில் இறந்தகால இடைநிலை இருக்குமாயின், இகரம் வருகிறது. னகர மெய்யில் வேர் முடியுமாயின் ‘ன்ன்’ என்பதும் குற்றியலுகரத்தில் வேர் முடியுமாயின் ‘இன் ¥ ன்’ என்பதும் வருகின்றன.

பழைய ‘நுனிநா பல்லொலி’ப் பிரிவும் ‘இன்’ பிரிவும் இவ் வினைவிகற்ப வாய்பாட்டின் அடிப்படைகளாக இருந்த போதிலும் பழைய வாய்பாடு எவ்வாறு மாறியுள்ளது என்பதை அறியும் போது வியப்புண்டாகிறது.

ஆ. நிகழ்காலம்

நிகழ்காலத்தில் வேர்களின் உகர முடிவு பலவிடங்களில் மறைகிறது. அகர உருபைச் சேர்த்து முதல் ஏழு வினைவிகற்ப வாய்பாடுகளிலும் ‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தைப் பெறலாம். இவற்றில் ‘ற்’ என்பது நிகழ்கால இடைநிலையாகும். ஏனையவற்றில் ‘க்ற்’ என்பது நிகழ்கால இடைநிலையாகும். இங்கு வேரின் இறுதியில் வரும் லகர, ளகர, ரகர மெய்கள் இழக்கப்படுகின்றன. வரிவடிவத்தில் இரட்டைக் ககர மெய்களாகக் குறிக்கப்