பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

290

படும் ஒலிப்பிலாக் ககர வெடிப்பொலியே இங்குக் குறிப்பிடப்படும் ககர மெய்யாகும்.

இ. எதிர்காலம்

முதலாறு வினைவிகற்ப வாய்பாடுகளிலும் வகர மெய் எதிர் காலம் காட்டுகிறது. எல்லா உயிர்களும் இப்பொழுது உகரத்தில் முடிகின்றன. ஆனால் ஆரம்பத்தில் யகர மெய்யில் முடிந்தவை இதற்கு விதிவிலக்கு. அவை இப்பொழுது இகரத்தைப் பெறுகின்றன. ‘செய் > செயி’.

ஆறாவது வினைவிகற்ப வாய்பாடு அருகிய ஆட்சி உடையது. 9, 10, 11, 12 ஆவது வினைவிகற்ப வாய்பாடுகள் பகர மெய்யைப் பெறுகின்றன. 9, 12 ஆவது வினைவிகற்ப வாய்பாடுகளைப் பொறுத்த வரையில் இதனோடு இன்னொரு பகர மெய் சேர்கிறது, எஞ்சியவற்றில் பூஜ்யம் (ழூ) சேர்கிறது, உயிரொலிகள் ய், ர், வ், ல், ள், ழ் (முதலாறு வினைவிகற்ப வாய்பாட்டு வேர்கள்) ஆகியவற்றுக்குப் பின்னர் பகர மெய் யகர மெய் வகர மெய்யாகிறது.

எட்டாவது வினைவிகற்ப வாய்பாட்டில் இசை நிறைக்க வந்த உகரம் அல்லது சொல்லாக்க அசைக் குகரத்திற்குப் பின்னர், ஏனையவற்றில் வருவது போன்று, வகர மெய் வருகிறது; அல்லது அதனது மூல னகர மெய்யானது மகர மெய்யாக, பகர மெய்யை நோக்கி, ஓரினமாக்கப்படுகிறது. பகர மெய்யும் மகர மெய்யாதல் உண்டு.

சான்று : தின்னுவா1 “தின்னுவான்”

தின்குவா1 (tinguva) ணு தின்பா1 (tinba)

a: ணு திம்மா1 (timma:)

அஃறிணையில் எதிர்காலம்

எதிர்காலம் காட்ட அஃறிணையில் ஒருமையிலும் பன்மையிலும் ‘செய்யும்’ என்னும் வாய்பாடு பயன்படுத்தப்படுகிறது.

1. வேர் + உ1 (முதல் எட்டு வினைவிகற்பங்களிலும்)
2. ஈற்று மெய் இழக்கப்பட்ட வேர் + கு1 (ஏனைய வினைவிகற்ப வாய்பாடுகளில்)

நிகழ்காலத்தைப் பொறுத்த வரையிலும் அஃறிணையில் ஒருமைக்கும் பன்மைக்குமிடையே பலவிடங்களில் வேறுபாடு ஏதும் செய்யப்படுவதில்லை. துகரம் நிகழ்கால விகுதியாக இருந்தது. ‘யி’