|
தமிழ் மொழி வரலாறு 293
கிடையே ஒரு வேறுபாடு
செய்யப்பட்டது. ‘நீங்கள்’ என்ற சொல் உயர்ந்தோரையும், ‘நீர்’ என்பது ஏறக்குறைய
சமநிலையில் உள்ளோரையும், ‘நீ’ என்பது தாழ்ந்தோரையும் குறிக்க வழங்குகின்றன.
திருநெல்வேலிக் கிளைமொழியில் ‘நீம்’ என்ற வடிவம் காணப்படுகிறது. எனவே ‘நீ’, ‘நீர்’,
‘நீம்’, ‘நீங்கள்’ என்பவற்றுக் கிடையேயான வேறுபாடு நான்கு நிலைகளை உடையதாகிறது.
வேற்றுமை உருபேற்கும் வடிவங்களில் ‘உன்’, ‘உம்’, ‘உங்கள்’ ஆகிய மூன்றே உள்ளது. இங்கு
வேறுபாடு மூன்று நிலைகளை உடையது.
ஏவல்
‘உயர்சொற் கிளவி’
ஏவல் வினை வடிவத்தையும் பாதிக்கிறது, வெறும் வேரை மட்டும் ஏவலுக்குப் பயன்படுத்துவது,
தாழ்ந்தோருக்கே வழங்குகிறது. சமமானவர்களிடம் பயன்படுத்துகையில் ‘உம்’ விகுதி
சேர்க்கப்படுகிறது. உயர்ந்தோர் கூற்றுக்கு ‘உங்கள்’ என்னும் விகுதி பயன்படுத்தப்படுகிறது.
“நட”, “நடவும்”, “நடவுங்கள்” என்பவற்றை நோக்குக. “அருளும்” என்னும் துணைவினை மிகுந்த
மரியாதையைக் காட்டுகிறது.
சான்று :
“நடந்தருளும்”
ஞானிகள்,
அரசர்கள் ஆகியோருக்கே இத்துணைவினை பயன்படுத்தப்படுகிறது.
படர்க்கையை உயர்வைக்
குறிக்க ஆளுதல்
படர்க்கையும் உயர்வைக் குறிக்க ஆளப்படுறது. இந்திய மொழிகளுக்கிடையேயான பொது இயல்பாக
இதனைக் கருதாம். இந்தியில் “ap”
என்பது உள்ளது. தமிழில் ‘தாம்’ ‘தாங்கள்’ என்னும் இரு பாகுபாட்டு நிலைகள் உண்டு.
உபநிடதங்களில் கடவுள் ‘த்த்’ என அஃறிணை ஒருமையிலேயே பேசப்படுகின்றான். ஆனால் பின்னர்
இதுவே கடவுளை மட்டுமன்றி ஞானிகளையும், துறவிகளையும் பற்றி உயர்வாகப் பேசுவதற்குரிய
முறையாகிவிட்டது. வினையும் அஃறிணை ஒருமை முடிவையே கொள்கிறது. ‘சாமி வந்தது’ எனக் கூறுவது
உயர்வாகக் கூறும் முறையாகும். இதன் விளைவாக ‘அவ்விடம்’, ‘அங்குத்தை’ என்னும் சொற்களும்
போற்றுதற்குரியோரை உயர்வாகக் குறிக்கும் பொருளுடையன ஆயின. ‘இங்கே’ என்பது தன்மையைக்
குறிக்க வரலாயிற்று.
|