பக்கம் எண் :

New Page 1

தமிழ் மொழி வரலாறு

295

(டா, டீ, யா, மா, பா) என மாறியுள்ளன. ‘உங்கள் > ungo, என்பது முக்கியமானவர்களைக் குறிக்க வழங்குகிறது. வந்தான், வந்தாள் என்பன தாழ்ந்தோரைக் குறிக்க முறையே ஆண்பாலில், ‘வந்தாண்டா’ (vananda) எனவும் பெண்பாலில் ‘வந்தாண்டி’ (vanandi) எனவும் வழங்குகின்றன. சமமானவரைக் குறிக்க ‘வந்தாயா’(vandda’ya) எனவும், தங்கையையோ பெண்ணையோ குறிக்க ‘வந்தாம்மா’,(vandamma) எனவும் உயர்நிலையில் உள்ள இளையோர் உள்ளிட்ட ஆடவரைக் குறிக்க ‘வந்தாம்பா’ (vandampa) எனவும் வழங்குகின்றன. ‘வந்தாங்கொ’ (vandango) என்பது மிகவும் முக்கியமானவர்களைக் குறிக்க வழங்குகிறது. கோயமுத்தூர்க் கிளைமொழியில் உயர்வு காட்டும் வடிவங்கள் இங்குக் கூறப்பட்டது போல மாற்றமின்றி ஒரே மாதிரியாக ஆளப்படுகின்றன.

iii ) துணைவினைகள்

இந்தோ - ஐரோப்பிய மொழிகளில் ‘பல பொருள் தருவதற்கு’ முன்னொட்டுக்கள் பயன்படுகின்றன. திராவிட மொழிகளில் துணைவினைகள் இப்பணியைச் செய்கின்றன. ‘தலைப்படு’ என்பது போலப் பெயர்கள் வினைகளுடன் சேர்ந்த தொகைகளின் முக்கியத்துவம் முன்னரே குறிப்பிடப்பட்டது. ‘ + பார்வை > மேற்பார்வை’, ‘கீழ் + அடங்கு > கீழடங்கு’ முதலியவற்றை இக்காலத் தமிழின் சான்றுகளாகத் தரலாம்.

வினைகளுக்குப் புதிய பொருள்களை உண்டாக்குவதற்குத் துணைவினைகள் மற்றொரு அடிப்படையாக விளங்குகின்றன. ‘அருள்’ என்னும் துணைவினை, பிறவினைகளுடன் சேர்ந்து, அவ்வினை புரிபவன் உயர்ந்தோன் என்பதைக் காட்டி நிற்கும். ‘கொள்’ என்னும் துணைவினை, வினையைத் தற்சுட்டாக்கும். இதனோடு ஒப்புமை உடைய ‘கொடு’ என்னும் துணைவினை ‘செயல் பிறிதொருவருக்கானது’ என்பதை உணர்த்தி நிற்கும்.

சான்று : பிரித்துக்கொள், பிரித்துக் கொடு

செயப்பாட்டு வினைக்கு வரும் ‘படு’ என்னும் துணைவினையின் பயன் முன்னரே குறிப்பிடப்பட்டது.

காலங்கள் (tenses) அல்லது வினைப்பொருட்கூறுகள் (aspects) என்பனவற்றைப் பொறுத்தவரையில் பல்வேறு குறிப்புப் பொருள்களை இத்துணைவினைகள் தருவதைக் கவனிக்க வேண்டும். தமிழ் மொழியில் பொதிந்துள்ள இவ் ஆற்றல் வளத்தை முதல் முதலில்