|
தமிழ் மொழி வரலாறு 296
குறிப்பிட்டவர் திரு. சூரியநாராயண சாஸ்திரி அவர்களே
எனத் துணியலாம்.9
“இடு, விடு, படு
பெறு, உண், கொள், அருள்” ஆகிய துணைவினைகள் பழந்தமிழைப் பற்றி ஆராய்கையில் முன்னரே
விளக்கப்பட்டன. “போ, வா, இரு, கொண்டிரு, போடு, அழு, தொலை” முதலியனவும் துணைவினைகளாக
வருகின்றன.
‘போ’ என்னும்
துணைவினை நிகழவிருப்பதைக் குறிக்கிறது. சான்று : செய்யப்போகிறான். அல்லது மூலவினையின் (main
verb) பொருளைத் தருகிறது. சான்று ; தூங்கிப் போனான்.
‘வா’ என்பது
வழக்கம் (habit) என்ற பொருளைத் தருகிறது.
சான்று : செய்துவருகிறான்.
‘இரு’ என்பது
‘காத்திருப்பதை’ அல்லது ‘தயாராக இருப்பதைக்’ குறிக்கிறது.
சான்று :
வந்திரு
‘கொண்டிரு’
என்னும் துணைவினை செயல் தொடர்வதைக் குறிக்கிறது. சான்று : செய்து கொண்டிருந்தான்.
‘இடு’, ‘விடு’
என்னும் துணைவினைகளுக்குப் பதில் கோயமுத்தூர் மாவட்டத் தமிழில் ‘போடு’ என்னும் துணைவினை
முடிந்த நிலையை உணர்த்த வருகிறது. எல்லா வினைகளுடனும் அது அசைநிலையாக வருகிறது. ‘விடி’
அல்லது ‘இடு’ என்பன வரைநிலை அடைமொழிகளாக (definitive)
வருகின்றன.
சான்று : வந்து
விடுவான்
‘செயல்முடி
காலங் (Perfect tense) காட்டுதல்’ என்ற முறையில் செயல் முழுமை பெறுவதையும் இத்துணைவினை குறிக்கிறது.
சான்று :
வந்துவிட்டான்
‘ஒழி’,
‘தொலை’, ‘அழு’ ஆகிய துணைவினைகள் ‘விரும்பாத தன்மையைக்’ குறிக்கின்றன.
சான்று : சொல்லி ஒழி
சொல்லித் தொலை
சொல்லி அழு
|
9.
V. G. Suriyanarayana Sastri :
Tamil moliyin, Varalaru p,
70.
|
|