|
தமிழ் மொழி வரலாறு 297
“ஆ, ஆக்கு, பண்ணு”
முதலியன பெயர்களை வினைகளாக்கப் பயன்படுகின்றன.
சான்று :
Oxidize
= ஆக்ஸிஜனாக்கு
எதிர்மறை
வினைவிகற்ப வடிவமான ‘மாட்டான்’ (matta:)
என்பது எதிர்மறைத் துணைவினையாக வருகிறது.
‘ஒட்டு’
என்பதிலிருந்து வந்த ‘ஒட்டும்’ என்பது துணைவினையாகவிருந்து அதே வடிவத்தில் விகுதியாக
‘முடியும்’ அல்லது ‘அனுமதிக்கப்பட்டுள்ளது’ என்னும் பொருளில் வழங்குகிறது. இதன் வழக்காறு
மிகுந்து வருகிறது.
சான்று : வரஒட்டும் < வரட்டும்
போகஒட்டும் < போகட்டும்
நிலைமொழி
ஈற்றில் உள்ள அகரமும் வருமொழி முதலில் உள்ள ஒகரமும் சேர்ந்து அகரமானதை நோக்குக.
iv) ஈரேவல் வினை
‘செய்வித்து’
என்பதைப் பாமரமொழி விளக்கப்போக்கு ‘செயவைத்து’ எனக் கருத வைக்கிறது. வினையுடன் ‘வை’
என்பதன் வினைவிகற்ப வடிவம் விகுதியாகச் சேர்ந்து, ஈரேவல் வினை உணர்த்தப்படுகிறது. இதன் விளைவாகப் பழைய வடிவமான ‘செய்வி’ மறைகிறது. மூலவினையின் எச்ச வடிவமும் ‘வை’ எனும்
துணைவினையும் சேர்ந்ததே ஈரேவல் வினையின் புதிய வடிவமாகும்.
v) உருபனியலில்
பிரதிபலிக்கப்படும் பொதுவான மாற்றங்கள்
விரைவாக
உச்சரித்ததின் விளைவாகத் தோன்றிய வடிவங்கள் மொழியில் நிலைபெறத் தொடங்கின.
இரட்டித்த நுனியண்ண வெடிப்பொலி இரட்டித்த நுனிநா பல் வெடிப்பொலியாக நிலை பெறுகிறது.
நுனியண்ண வெடிப்பொலி அதனுடைய இன மூக்கொலியுடன் சேர்ந்து நெடில் நுனியண்ண
மூக்கொலியாகிறது. வேர்கள் உகர முடிவு கொள்கின்றன. ஆனால் பழைய யகர முடிவு கொள்வன மட்டும்
இதற்கு விதிவிலக்கு. அவை அதற்கு (யகரத்துக்கு) அடுத்து இகரத்தைப் பெறுகின்றன. இரட்டித்த
வெடிப்பொலிகள் குறில் வெடிப்பொலிகளாகின்றன. உயிரிடை ஒலிப்புடை வெடிப்பொலிகள், பல
கிளைமொழிகளில் உரசொலிகளாகின்றன. வெடிப்பொலிகள் மூக்கொலிக்குப் பின்னர்
ஒலிப்புடையன ஆகின்றன. மூக்கொலிகள் பல சமயங்களில் ஓரினமாதலுக்கு ஆளாகி
வெடிப்பொலிகளாகின்றன
|