|
2. 2 ஒலியனியல் (Phonology)
மற்றொரு பிரிவு
மொழியின் ஒலிகள் தொடர்பானது, ரகரமும் ஆடொலியாகிய றகரமும் (இவ்வொலி ஒரு காலத்தில்
நுனியண்ணத் தடையொலியாக ஒலிக்கப்பெற்றது) தமிழில் பெரும்பாலான கிளை மொழிகளில்
ஒன்றாகிவிட்டன. இது மொழியின் ஒலியன் அமைப்பையே (Phonemic
structure) மாற்றுகின்றது. ஆனால் ஈருயிரிடை வரும் கடையண்ணத் தடையொலியை உரசொலியாக ஒலிப்பது
மொழியின் ஒலியன் அமைப்பைப் பாதிக்காத வெறும் ஒலி மாற்றமே.
2. 3 உருபொலியனியல்
(Morphophonemics)
உருபொலியன் மாற்றங்கள் எனச் சில உள்ளன. அவையாவன : (அ) உருபுகளின் வடிவம் அல்லது
ஒலியன் அமைப்பில் மாறுபாடுகள். காட்டு: ‘பொலன்’ என்னும் சொல் ‘பொன்’ எனவும் ‘மண்’
என்னும் சொல் ‘மண்ணு’ எனவும் மாறுதல். (ஆ) இலக்கண வடிவுகளின் மாற்றங்களில் மாற்றங்கள்.
காட்டு : ‘அதன்’ என்னும் சொல் ‘அதற்கு’ என்ற சொல்லில் ‘அதற்-’ என்ற மாற்று
வடிவத்தையும் பின்னர் ‘அதனுக்கு’ என்ற சொல்லில் ‘அதனு-’ என்ற மாற்று வடிவத்தையும்
பெறுதல்.
2. 4 உருபனியல் (Morphology)
உருபன்களின் கட்டமைப்பிலும் மாற்றங்கள் உள்ளன. பழைய வடிவங்களுக்குப் பதிலாகவோ
அல்லது கூடுதலாகவோ புதிய உருபன்கள் தோன்றுதலும் அல்லது உருபுகளை அடுக்கி வழங்கும் முறைமையில்
மாற்றங்களும் இவ்வகையில் அடங்கும். செயப்பாட்டு வினை விகுதியின் வளர்ச்சியையும் துணை
வினைகளின் வளர்ச்சியையும், (பால் விகுதிகள் தொடக்கக்காலத்தில் வழக்கில் இல்லை என்று
கொண்ட நிலையில்) பால் காட்டும் விகுதிகளின் வளர்ச்சியையும் எடுத்துக் காட்டுகளாகத்
தரலாம்.
2. 5 தொடரியல் (Syntax)
தொடரியல் அமைப்பிலும் மாற்றங்கள் உள்ளன. காட்டு : ‘நோகோ யானே’ என்னும்
தொடரில் யான் என்னும் எழுவாய் பயனிலைக்குப் பின்னால் பழங்காலத்தே பெரிதும் பயின்று
வந்துள்ளது. இதனை வெறும் செய்யுள் விகாரம் என்று தள்ளிவிடமுடியாது. இத்தகைய தொடரமைப்பு
இன்றைய தமிழில் எழுவாய் முன்னும்
|