|
தமிழ் மொழி வரலாறு 33
குருக் முதலியன வட திராவிட
மொழிகளாகும். இரண்டாம் கிளையாகிய மத்திய திராவிட மொழிகள், மத்தியப்பிரதேசம்
ஆந்திரப்பிரதேசத்திற்கு வடக்குப்பகுதி, ஆந்திரநாட்டிற்குள்ளாகவே சில சின்னஞ்சிறு
பகுதிகள் முதலிய இடங்களில் பேசப்படுகின்றன. கன்னடம், தமிழ், மலையாளம், துளு, படகா,
தோடா, கோட்டா, குடகு முதலியன மூன்றாம் கிளையாகிய தென் திராவிட மொழிகளாகும். தெலுங்கு
மத்திய திராவிடப் பிரிவோடு நெருங்கிய உறவுடையது; எனினும் சில அம்சங்களில் இது தென்
திராவிட மொழிகளின் சில சிறப்பு இயல்புகளையும் பெற்றுள்ளது.
3 தென் திராவிட
மொழிகளின் சிறப்பியல்புகள்
அஃறிணை ஒன்றன்பாலிலிருந்து வேறுபட்ட தனி, உயர்திணைப்
பெண்பால் ஒருமை விகுதியைப் பெற்றிருப்பது தென் திராவிட மொழிகளின் சிறப்பியல்பாகும்.
தென் திராவிட மொழிகள் நீங்கலாக ஏனையவற்றில் பெண்பால் ஒருமையும், அஃறிணை
ஒன்றன்பாலும் வேறுபடுத்தப்படுவதில்லை. ஆனால் தென் திராவிட மொழிகளில் கூடப் பெண்பால்
ஒருமை விகுதிகளில் ஒன்றான ‘இ’ முன்னர் அஃறிணை ஒன்றன்பாலுக்கும் உரியதாக இருந்தது.
பின்னர் உயர்திணை அஃறிணை இரண்டிற்கும் பொதுவானதாயிற்று. சான்று: கிழவி(உயர்திணைப்
பெண்பால்), மண்வெட்டி (அஃறிணை), நாணிலி (பொது).
அ. மொழி முதல் இடையண்ண
ஒலி இழப்பு
தென் திராவிட
மொழிகளின் அடுத்த சிறப்பியல்பு மொழி முதல் இடையண்ண ஒலி இழக்கப்படுதலாகும். பொதுவாக,
இடையண்ண வெடிப்பொலி மட்டுமே மொழி முதலில் இழப்புறுவதாகக் கருதப்படுகிறது. இடையண்ண
வெடிப்பொலியோடு இடையண்ண மூக்கொலி அல்லது இடையண்ண யகர மெய் ஆகியனவும் இழப்புறுகின்றன
என்பதையும் சொல்ல விரும்புகின்றேன். மொழி முதல் நுனிநா பல் மூக்கொலியான நகரம்
இழப்புறுவது, பிறழ் பிரிப்பால் ( metanalysis) நிகழ்வது என்று விளக்கப்படுவதுண்டு. இந்நகரம் ஆரம்பத்தில் இடையண்ண மூக்கொலியான ஞகரமாக
இருந்தது என நம்பக் காரணமுண்டு. எனவே மொழி முதல் நகரம் இழப்புறுவதும், “மொழி முதல்
இடையண்ண ஒலி இழப்புறுதல்” என்பதைச் சார்ந்ததேயாகும். சான்றாக முன்னிலை ஒருமையான ‘நீன்’
என்பதில் உள்ள மொழி முதல் நகரமெய் ‘ஞாய்’ (உன்தாய்) என்பதில் ‘ஞ்’
|