|
தமிழ் மொழி வரலாறு 34
என வருகிறது.2
முன்னிலையில் ஆரம்பத்தில் மொழிக்கு முதலிலிருந்த ஞகரம் பின்னர் இழப்புற்றது எனக்
கூறலாம். ஆனால் ஞ்-/ந்-/ய்- பற்றிய இப்பகுதி இன்னும் நன்கு ஆராயப்பட வேண்டும். இடையண்ண
யகர மெய் மொழி முதலில் இழப்புறுகிறது. சில சமயங்களில் அடுத்துள்ள உயிரை இடையண்ண ஒலியாக
மாற்றிய பிறகு அது இழப்புறுகிறது. இடையண்ண ஒலிகள், மொழி முதலில் இழப்புறுதல் தெலுங்கிலும்
காணப்படுகிறது. தென் திராவிட மொழிகளில் ‘உப்பு’ என வழங்கும் சொல் பிற திராவிட
மொழிகளில் ‘சுப்பு’ என உள்ளது, ‘ஈ’ எனும் தென் திராவிட வேர் பிற திராவிட மொழிகளில்
‘சீ’ என வழங்குகிறது. பர்ரோ நிறையச் சான்றுகளைத் தொகுத்துள்ளார்.3
ஆ. ஒலி இடம் பெயர்தலின்
(
Metathesis) இயல்புகள்
தெலுங்கிலும் பிற மத்திய திராவிட மொழிகளிலும் நிகழ்வது போன்ற முறையான ‘இடம் பெயர்தல்’ தென் திராவிட
மொழிகளில் ஏற்படுவதில்லை. இல > லே (தெலுங்கு) என ஆனது ஒலி இடம் பெயர்தலாகும். முதற்
சொல்லில் இருபுறமும் உள்ள உயிர்கள் சேர்ந்து ‘ஏ’ வந்தது. தமிழில் ‘இரண்டு > ரெண்டு’ என
வழங்குகிறது. ‘இர > ரெ’ என மாறியது இடம் பெயர்தலாகும். ஆனால் இது தெலுங்குக் கிளை மொழி
ஒன்றிலிருந்து கடன் பெறப்பட்டதே. (உயிரின் அளவு மாற்றம் பின்னர் விளக்கப்படும்.)
இ. கன்னடமும் பிற தென்
திராவிட மொழிகளும்
கன்னடமொழிக்
குழுவிற்கும் தமிழ் மொழிக் குழுவிற்குமிடையே ஒரு வேற்றுமை உண்டு. இதில் கன்னடம் ஏனைய
திராவிட மொழிகளை ஒத்துள்ளது. மொழி முதல் கடையண்ண ஒலிகள் தம்மை அடுத்து
‘முன்னுயிர்களை’ப் (front vowels) பெற்றிருக்குமாயின் அவை இடையண்ண ஒலிகளாகத் தமிழிலும் மலையாளத்திலும் மாறுகின்றன.
சான்று : கின்ன > சின்ன;
கெம் > செம்
|
2.
குறுந்தொகை
“யாயும் ஞாயும் யாராகியரோ. . .”
3.
T. Burrow :
“Dravidian Studies” VI (BSOAS Vol.
XII, Part I,1947).
|
|