|
தமிழ் மொழி வரலாறு 37
1. முந்தியது : திணை, பால்,
எண், இடம் காட்டும் விகுதிகளைப்
(
Pronominal suffix) பெறாதது.
2. பிந்தியது : திணை, பால்,
எண் காட்டும் விகுதிகளைப் பெற்றது.
யூல் ப்ளாக்கும் பிறரும்
சுட்டிக்காட்டுவதைப் போலத் ‘திணை, பால், எண், இடம் காட்டும் விகுதிகள்’ என்பன
பிற்காலத்திய வளர்ச்சிகள் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இங்கு ‘முந்தியது
பிந்தியது’ என்ற சொற்கள் ஆளப்பட்டுள்ளன.7
ii ஒரு பழைய வடிவம்
‘செய்யும்’ என்னும்
வாய்பாட்டு வடிவம் வழக்கில் உள்ள இத்தகைய பழைய வடிவமாகும். (கால்டுவெல்
இவ்வாய்பாட்டை முக்காலத்துக்கும் ஒத்தவடிவம் (
aorist) என்றழைக்கிறார்). இவ் வாய்பாட்டில் வேரும் உம் விகுதியும் உள்ளன. வேருடன், கு அல்லது
து என்னும் சொல்லாக்க அசை பெற்ற பின்னர், ‘உம்’ பெறும் வடிவங்களும் உண்டு. ‘செய்யும்’
என்னும் வாய்பாடு தமிழில் படர்க்கை உயர்திணைப் பன்மையிலும் தன்மை, முன்னிலையிலும்
வராது.8
தன்மைப் பன்மைக்கு இவ்வடிவம் ‘கு’ அல்லது ‘து’ என்னும் சொல்லாக்க அசை பெற்று வருகிறது.9
கால்டுவெல்,
|
7. Jules Bloch:
The Grammatical Structure of Dravidian
Languages, p 59, 1954.
8.
தொல்காப்பியம், 712 ஆவது நூற்பா
“பல்லோர் படர்க்கை
முன்னிலை தன்மை
அவ்வயின் மூன்றும்
நிகழுங் காலத்துச்
செய்யும் என்னும்
கிளவியோடு கொள்ளா.”
9.
தொல்காப்பியம், 687 ஆவது நூற்பா
“அவை தாம்,
அம் ஆம் எம் ஏம்
என்னுங் கிளவியும்
உம்மோடு வருங் கடதற
என்னும்
அந்நாற் கிளவியோடு
ஆயெண் கிளவியும்
பன்மை உரைக்குந்
தன்மைச் சொல்லே.”
R.Caldwell :
A Comparative Grammar of Dravidian Languages, p
485.
|
|