|
தமிழ் மொழி வரலாறு 38
யூல் ப்ளாக் ஆகியோர் சுட்டிக்
காட்டியுள்ளபடி கன்னடத்தில் இவ்வடிவம் இந்த ஆக்க அசைகளுடன் மூவிடங்களிலும் எவ்விதத்
தடையுமின்றி வருகிறது.10
எனவே தமிழில் காணப்பெறும் வரையறை பழைய வடிவங்கள் வழக்கிழந்து போகாமல் படர்க்கையில்
மட்டும் வழங்குவதாலேயும், பெயர்ப்பதிலி விகுதிகளை உடைய
(
Pronominal
Suffixes) வடிவங்கள் தன்மையிலும் முன்னிலையிலும் பழைய
வடிவத்தை வழக்கிழக்கச் செய்துவிட்டதாலும் ஆகும்.
iii ஒருமையாகவும் பன்மையாகவும்
வழங்கும் பழைய வடிவம் (
An old form as
singular and plural)
இவ் ஆக்க அசைகளுடன்
கூடிய இருவடிவங்கள் நமக்குக் கிட்டுகின்றன. ஒருமையில் அவை உகரத்திலும் பன்மையில் உம்மிலும்
முடிகின்றன. பண்டைக்காலத் ‘திணை, பால், எண், இடம்’ காட்டும் வடிவங்களை ஆராய்ந்தால்,
னகரம் ஒருமையையும் மகரம் பன்மையையும் காட்டுவதை அறியலாம். மகரம் இன்றளவும்
நிலைத்திருப்பதால் அதற்கு இணையான ஒருமைக்குரிய னகரம் முன்னர் இருந்திருக்க வேண்டும்
எனக்கொள்ளலாம். ஆனால் பின்னர் அது கெட்டிருக்க வேண்டும். தமிழிலுள்ள ‘நீன்’ எனும்
வடிவம் தனது ஈற்று னகரத்தை இழந்து இன்று ‘நீ’ என்று முன்னிலை ஒருமையில் வழங்கி வருவதைச்
சுட்டலாம். ‘செய்யும்’ எனும் வாய்பாட்டில் ஆக்க அசை இல்லாததால் அதற்கு இணையான
னகரத்தில் முடியும் வடிவம் இல்லை எனினும் தெலுங்கில் னகரத்தில் முடியும் ‘சேசனு’
( cesanu) என்ற வடிவம் உள்ளது. பழைய பயனிலைகளுடன் திணை, பால், எண், இடம் காட்டும் விகுதிகள்
சேர்க்கப்பட்டு, பின்னர் உண்டான சொற்களிலிருந்து தமிழிலேயே இவ்வடிவத்தைத் திரும்பப்
பெறலாம். ‘செய்யும்’ என்பதிலிருந்து ‘செய்யுமோர்’ எனும் பின்னைய வடிவத்தை ‘ஓர்’
விகுதியைச் சேர்த்துப் பெறுகிறோம். ‘செய்யுந்து’ என்பதில் ‘து’ விகுதி அஃறிணை ஒருமை
விகுதி எனப் பிரிக்கப்படுமாயின் ‘செய்யுந்’ கிடைக்கும். புறநானூற்றுப் பாடலொன்றில்
‘செய்யுந்து’ என்பது இதே வாய்பாட்டில் உள்ள பிற பெயர்ப் பயனிலைகட்கு எதிராக
|
10.
Jules Bloch :
The Grammatical Structure of the
Dravidian Languages(Eng. Tr),
Poona.
|
|