பக்கம் எண் :

New Page 1
 

தமிழ் மொழி வரலாறு

39

வும் பின்னர் இறுதியில் ‘பெயருடனும்’ பயன்படுத்தப்பட்டுள்ளது.11 இதே போல் ‘செய்யுநன்’ என்பதிலிருந்து ‘அன்’ நீக்கப்பட்டால் நகரத்தில் முடியும் வடிவம் கிடைக்கிறது. இந்த நகரம் ஒருமை விகுதியாக உணரப்படவில்லையாயின், அதனுடன் பன்மைப் பெயர்ப் பதிலி (Pronominal) விகுதிகள் சேர்க்கப்படலாயின. அஃறிணையைச் சார்ந்த சொற்களின் ஈற்றில் உள்ள னகரமும் மகரமும் மயங்குவன எனத் தொல்காப்பியர் மொழிகிறார்.12 சான்று : மரம் > மரன் (மரந்) (மூலத் திராவிட மொழியில் நுனிநாப்பல் மூக்கொலியும் நுனியண்ண மூக்கொலியும் ஒரே ஒலியன்). இந்த நிலையில் ‘செய்யும்’ ‘செய்யுன்’ என்பவற்றை வேறுபடுத்த முடியாது. அதிலும் குறிப்பாக னகரம் ஆண்பால் விகுதிக்கு இறுதியாயின் அஃறிணைக்கு மகரமே போற்றப்படுகிறது.

பயனிலையாக வரும் பழைய வடிவம்

இவ் ஆய்விலிருந்து பழைய பயனிலை வடிவங்களுடன் ‘திணை, பால், எண், இடம்’ காட்டும் விகுதிகளைச் சேர்க்கலாயினர் என்பது தெரிய வருகிறது. இச்செய்தி இன்னும் தெளிவாகப் பின்னர் ஆராயப்படும். ‘நின்றோர்’ போன்ற வடிவங்களை ஆராய்ந்து ‘ஓர்’ விகுதியை நீக்கினால் கிடைக்கும் ‘நின்று’ எனும் வடிவம் சில இடங்களில் வினைமுற்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது வியப்புத் தருகிறது. பழைய உரையாசிரியர்கள் இதை வினைமுற்று என்றே விளக்குகின்றனர்.13


11. புறநானூறு, 24 வது பாடல்

“. . .தென்கடல் திரை மிசைப் பாயுந்து
. . .தண்குரவைச் சீர்தூக்குந்து;. . .
. . .எல் வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து”

12. தொல்காப்பியம் 82வது நூற்பா

“மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த
னகரத் தொடர்மொழி ஒன்பஃ தென்ப
புகரறக் கிளந்த அஃறிணை மேன”

13. ஐங்குறுநூறு 52

“. . . . . .குறுமக ளினைய
செவ்வாய் முன்னின்று மகிழ்நநின் றேரே”

A. Sadasivam :

“The Suffix cin” in Sankam,” Tamil Culture.Vol. VII, pp 140-150, April 1958.