|
தமிழ் மொழி வரலாறு 42
கடினமே ஆகும். துணை வினைகளோடு
கூடிய தற்காலக் கூட்டு வினை வடிவங்கள், மேற்குறிப்பிடப்பெற்ற பழங்கால மரபுத்தொடர்
முற்றிலுமாக இறந்துபடவில்லை என்பதைக் காட்டுகின்றன. ‘நின்றாங்கு’, ‘நின்றி’ (நின்று +
இ) என்பன போன்ற வடிவங்களிலிருந்து கூட்டுவினைகள் ஒப்புமையாக்கமாக உருவாக்கப் பட்டுள்ளன.
பழைய மரபுத்தொடர்
பிற்காலத்திலும் கையாளப்படுதல்
பிற்காலத்தில்
இவ்வடிவங்கள் ஏதேனும் ஒரு வகையில் காலம் காட்டும் முறையிலேயே இடம் பெற்றன எனினும்,
வழக்கிலுள்ள சில மரபுத் தொடர்களில் வரும் இவ்வடிவங்கள் ஆரம்ப காலத்திலிருந்து காலம்
காட்டவில்லை என்பது வியப்பளிப்பதாக உள்ளது. திராவிட மொழிகளில், இறந்தகாலம்,
இறந்தகாலம் அல்லாதன என்ற பகுப்பே அடிப்படையான காலப் பாகுபாடாகும். நிகழ்காலமும்,
எதிர்காலமும் வேறுபடுத்தப்பட்டாலும், அவற்றிடையே மயக்கம் மிகுதி. ‘வருகிறேன்’ என்பது
நிகழ்காலமாயினும் எதிர்காலத்திற்கும் பயன்படுத்தப்படலாம். சான்று: ‘நாளை வருகிறேன்’.
இறந்த காலத்தைக் குறிப்பதாக விளக்கப்படும் ‘உணர்ந்து’, ‘நுவன்று’ முதலிய வடிவங்கள், பழைய
நூல்களில், இறந்தகாலம் அல்லாதவற்றைக் குறிக்கின்றன.
“சென்றீ” என்பது
போன்ற வடிவங்கள் ஏவலாக வருகின்றன.20
இங்கு இகரம் துணை வினையாகும். எனவே எஞ்சுவது “சென்று” எனும் வடிவமே. ‘வருதி’, ‘போதி’
போன்றவற்றில் இகரத்தை நீக்கி விட்டால், அவ்வினைகளில் ஈற்றில் எஞ்சும் “து” என்பது
பழைய இலக்கண முறைப்படி இறந்த காலத்தையே காட்ட வேண்டும். ஆனால் அது இறந்தகாலம்
அல்லாததை உணர்த்துகிறது. இவற்றில் வரும் துகரம் ‘மருந்து’ என்பதில் உள்ளது போல,
சொல்லாக்க அசையாக இருக்கலாம். நெட்டுயிர் உள்ள ஓரசை வேர்கள் ஒரு விகுதியைப் பெற்றுக்
குறுகுகின்றன என்றும், பின்னர் அவை “து” என்னும் ஆக்க அசையைப் பெறுகின்றன என்றும் எமனோ
சுட்டிக் காட்டுவது மேலே சொல்லப்பட்ட கருத்துக்கு வலுவூட்டுகிறது. சான்று : ஆர்> அரு; அரு + து>
|
20.
அகநானூறு, 46-16
“. . .சென்றீ, பெரும!
நிற் நகைக்குநர் யாரோ”
|
|