பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

43

அருந்து.21 வேருக்கு அடுத்தும் “து”வுக்கு முன்னரும் ‘உந்’ இருக்கலாம் என யூல் ப்ளாக் கூறுவார்.22 “கு” வெறும் சொல்லாக்க அசையாக இல்லாத எல்லா இடங்களிலும் எதிர்காலம் காட்டுவதில்லை. தன்மை, முன்னிலையில் சிலவிடங்களில் குருக் மொழியில் ‘பு’ இறந்தகாலம் காட்டப் பயன்படுத்தப்படுவது போலச் சில இடங்களில் தன்மை, முன்னிலை ஆகியவற்றில் ‘கு’ இறந்தகாலம் காட்டும். இச்சொல்லாக்க விகுதிகள் ( Formative Suffixes) பின்னர் காலம் காட்டும் இடைநிலைகளாகப் பயன்படலாயின.23 ஆரம்பகாலத்தில் இவை வேறு வழக்கில் வந்திருக்க வேண்டும். ஆனால் அவற்றைப் பற்றியெல்லாம் விளக்கக் கூடிய நிலைக்குத் திராவிட மொழி ஆராய்ச்சிகள் இன்னும் வளர்ச்சி அடையவில்லை.

காலம் காட்டும் இடை நிலைகளின் வளர்ச்சி

இந்த ஆக்க அசைகள் எவ்வாறு காலம் காட்டத் துவங்கின என்பதைக் கற்பனையாகவாவது எண்ணிப்பார்க்க முயலலாம். தமிழ் வாக்கியம் ஒரு எழுவாய் பயனிலையுடன் வேறு இணைப்புக்கள் இன்றி வழங்கத் தொடங்கியிருக்கலாம். ‘இணைப்பு’ என்பது ஆழ் நிலை இலக்கணத்திற்கு ( Deep Grammar) உரியதாகும். ‘இணைப்புச் சொல்’ அந்நிலையிலேயே தோன்றா நிற்கும். இன்று கூடப் பல வாக்கியங்களில் இந்நிலை விளங்கக் காணலாம். சான்று : ‘இது மரம்’, என்பது “இது மரம் ஆகும்” என்பதைக் குறிக்கிறது.

முன்னர் ஆராயப்பட்ட ‘செய்யும்’ எனும் வாய்பாடு எக்காலத்திற்கும் பொதுவான உண்மைகளான ‘சூரியன் உதித்தல்’ போன்றவைகளைக் குறிக்க, மரபுத்தொடர் போலப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றது. ‘அவன் செயல்’ எனும் வாக்கியத்தில் வருவது போலப் பயனிலை என்பது ஒரு காலத்தில் பெயர்த் தன்மையதாக ( Substantive) இருந்து, தொழிலை மட்டுமே குறித்திருக்க வேண்டும். இவ்வாக்கியம் ‘அவன் செய்கிறான்’, ‘அவன் செய்யட்டும்’ என்னும் பொருள்களில் வருகின்றது. தொழிற் பெயர்கள் பயனிலையாகப்( Predicate) பொருள் கொள்ளப்பட்டன. இதைப் போலவே துகரம்


21. M.B. Emeneau :

Comparative Dravidian Phonology.

22. Jules Bloch :

The Grammatical Structure of Dravidian Languages, p 72.

23. S. Vaiyapuri Pillai :

History of Tamil Language and Literature, Madras, 1956, p 58.

இறையனார் களவியல் உரை, பாயிரம்.

தொல்காப்பியம், 512

“அவற்றுள்
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்தே”.

தொல்காப்பியம், 513

‘ஏனை யிரண்டும் ஏனை இடத்தே’.
தோடா மொழியில் கொடு”என்பது இங்ஙனம் வரன்முறைக்கு
உட்பட்டுப் பயன்படுத்தப்படுவதாக எமனோ கூறுகிறார்.

M. B. Emeneau,

Language, Vol. 21, 1945.