பக்கம் எண் :

New Page 5
 

தமிழ் மொழி வரலாறு

44

போன்ற ஆக்க அசைகள் பெற்ற வினை வேர்கள், காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பயனிலையைக் குறித்திருக்க வேண்டும். சான்று: ‘அவன் செய்து’. இதில் சூழ்நிலையைக் கொண்டு காலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்; பின்னர் சொல்லாக்க அசை பல்வேறு காலங்களைக் காட்டும் வகையில் வளர்ச்சியுற்றிருக்க வேண்டும்.

இறந்த காலம்

பயனிலைகள் ஒரே தொடராக வரும் பொழுதும் அவை நிகழ்ச்சிகளின் வரலாற்று முறைப்படியேதான் அமையும். பின்னால் வருவதோடு நோக்குகையில் முந்தையது இறந்த காலமாக அமையும். இவ்வாறாக, அதிகமாக வழங்கி வரும் துகர ஆக்க அசையானது கிட்டத்தட்ட ஒரே முறையில் இறந்த காலத்தைக் குறிக்கலாயிற்று.

ஒப்புமையால் காலங்காட்டல் ( Relative Tense)

தென் திராவிட மொழிகளில் ‘செய்து’ எனும் வினை எச்சம் மரபுத் தொடராகப் பயன்படுவதை இவ்வகையில் குறிப்பிடலாம். வினைமுற்றுக்கள் காட்டும் காலத்திற்கு மாறாக, எச்சங்கள் காட்டும் காலம் ஒப்புமையானதே. ‘உண்டு வந்தான்’ என்ற தொடரில் ‘உண்டு’ என்பதை ‘வந்தான்’ என்ற இறந்த கால வினைமுற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இறந்த காலமே ஆகும். ஆனால் ‘நாளை உண்டு வருவேன்’ என்பதில் வினைமுற்றோடு ஒப்பு நோக்குகையில் மட்டுமே ‘உண்டு’ என்பது இறந்த காலம் ஆகிறது. ஆனால் வினை முற்றோ எதிர்காலத்தைக் காட்டுகிறது. முடிவாக நோக்குகையில் ‘செய்து’ எனும் வினையெச்ச வாய்பாடும் உண்மையில் எதிர்காலத்தையே காட்டுகிறது.

இவ்வாறாக இச்சொற்கள், எவ்வரிசை முறையில் வந்தனவோ அவ்வரிசை நோக்கிக் காலம் புரிந்து கொள்ளப்பட்ட முறையிலிருந்து உருப்பெற்றதின் விளைவே இந்நிலைக்குரிய காரணமாகும்.

இறந்தகாலம் அல்லாதவற்றின் வளர்ச்சி

பெருவழக்கினவாகத் துகரத்தில் முடியும் வடிவங்களின், “துகரம்” இறந்தகாலத்தைக் குறிப்பதாகக் கொள்ளப்பட்டதிலிருந்து, துகரவிகுதியானது இறந்தகாலம் காட்டும் இடைநிலையாகக் கருதப்படலானது. இறந்த காலம் தனியாக வேறுபடுத்தப் பட்டதும், இறந்த காலம் அல்லாததும் இவ்வாறே வேறுபடுத்தப்பட