|
தமிழ் மொழி வரலாறு 45
லாயிற்று. பிற சொல்லாக்க
அசைகளான கு, பு, என்பன, இறந்த காலம் அல்லாதவற்றைக் குறிக்கும் விகுதிகளாகக்
கருதப்படலாயின. தமிழ்ச்சொற் களஞ்சியம் குறிப்பிடும் 9, 10, 11, 12 ஆவது வினை விகற்ப
வாய்பாடுகளில் சொல்லாக்க விகுதிகளான “க வும் ப வும்” இடம்மாறிக் கொள்கின்றன. (பின்
இணைப்பைக் காண்க.) சான்று : ‘நிற்ப, நிற்க’. பார்ஜி மொழியில், இவைகளுக்கிடையில்
உள்ள வேறுபாடு பர்ரோ சுட்டுவது போல வெறும் கிளைமொழி மாற்றங்களே ஆகும்.24
தமிழில்கூட, இலக்கிய மொழியோடு வட்டார வழக்குகளும் கலந்திருக்கக் கூடும். இது
எப்படியாயினும், இறந்தகாலமல்லாதவற்றில் எதிர்காலத்தினைக் குறிக்கப் பகரம் மிகுதியாக
வருகிறது. மேற்கூறிய வினைவிகற்பங்களில் கண்டிப்பாக இடம் பெறும் சொல்லாக்க அசையான
ககரம் பழைய தன்மை இடத்திலும் வருகிறது.
ககரம் என்பது சொல்லாக்க அசையாக, எல்லா வினை
வேர்களுடனும், அவை எதிர்கால முற்றாக வரும் பொழுது வரலாம் என்றும், அச்சொற்களில்
எதிர்காலம் என்பது பகரத்தின் மாற்று வடிவமான வகரத்தால் காட்டப்பெறும் என்றும்
தொல்காப்பிய உரையாசிரியர் சேனாவரையர் சுட்டிக் காட்டுகிறார்.25
சொல்லாக்க அசைகள்
சேர்க்கப்படும் பொழுது உண்டாகும் உருபொலியன் மாற்றங்கள்
நன்கு நிலை பெற்ற உருபொலியன் விதி ஒன்றின்படி தகரம்
என்பது ன் / ல் க்குப் பிறகு வருகையில் நுனியண்ண வெடிப்பொலியாகிறது; ண் / ள் க்குப் பிறகு
வருகையில் நாவளை வெடிப்பொலியாக மாறுகிறது. ‘உண்டு, நின்று’ என்பவற்றில் உண்மையில்
உள்ளது இத்தகரமே என்பதை இது விளக்கும். இவ்விதிக்கு உட்பட்டு வராத வடிவங்களை அவை துகரம்
பெற்றிருந்தாலும் கூட, இறந்தகாலமல்லாதவற்றைச் சேர்ந்தவை என்றே வேறுபடுத்திக் கூறுதல்
வேண்டும்.
சான்று : வருது, சேறு,
(செல் + து). ஒரு காலத்தில் இவை ‘வந்து, சென்று’ என்பவற்றின் மாற்று வடிவங்களாகவே
இருந்திருக்க வேண்டும். பின்னர் இவை “வந்து, சென்று” என இறந்த
|
24.
T. Burrow :
Parji, p
48.
25.
தொல்காப்பியம், சேனாவரையர் உரை 491, 497, 687 ஆவது
நூற்பாக்கள்.
|
|