பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

46

கால வடிவங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. முந்தையது இறந்தகாலம் அல்லாதது காட்டும் இடைநிலையாக ஏற்கப்பட்டதும் ஒப்புமையாக்கத்தின் மூலம் எல்லா வினை வேர்களுக்கும் இவை விரிவுற்றன.

‘கு’ முதலியவற்றுடன் வரும் வேர்களுக்கும் பழைய துகரத்துடன் வரும் வேர்களுக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. இரண்டாவது மூன்றாவது வினைவிகற்ப வாய்பாடுகளைச் சேர்ந்த சில வினைகள் நாவளை அல்லது நுனியண்ண மூக்கொலியாக முடிவதில்லை. பதிலாக அவற்றிற்கு இணையான மருங்கொலிகளை அவை பெற்றுள்ளன.

சான்று : கொண் > கொள்

சென் > செல்

வட்டார வழக்குகளில் உள்ள பல சொற்கள் இத்தகைய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. காலப்போக்கில் அவை அவ்வப்போது இலக்கிய மொழியிலும் இடம் பெறலாயின.

சான்று : எண் > எள்

கொண் > கொள்
இன் > இல்
நோன் > நோல்
ஆண் > ஆல்
அகன் > அகல்

ஆரம்பத்திலிருந்தே வரும் வட்டார வழக்குகளில் காணப்படும் மாறுபட்ட வடிவங்களாக இவற்றைக் கருதலாம் என்றாலும் தமிழ் இலக்கிய மொழியை மட்டும் கருத்திற்கொண்டு பார்க்கையில் இவற்றை வரலாற்று ரீதியிலான மாற்றம் என்ற முறையிலேயே கருத வேண்டும். சிலர் முயல்வது போல, பிறழ்பிரிப்பு முறையில் இவற்றை விளக்க முடியாது.

ஊ. திராவிட மொழிகளில் விட்டிசைத்தல் (குரல்வளை வெடிப்பொலி*)

ஜெர்மனியர்கள் ஆங்கிலம் பேசும் பொழுது உயிரொலியோடு தொடங்க வேண்டிய எல்லா ஆங்கிலச் சொற்களிலும் விட்டிசை ஒலியை இணைக்கும் போக்கு உள்ளது என்பதை டானியேல


* “விட்டிசைத்தல் வெடிப்பொலி”, “குரல்வளை வெடிப்பொலி” ( glottal stop)
என்பவற்றை ஒரு பொருட் பன்மொழிகளாக ஆசிரியர் இந்நூலில் கையாண்டுள்ளார்.