|
தமிழ் மொழி வரலாறு 47
ஜோன்ஸ் விளக்கியுள்ளார்.26
இடையீடுகளைக் கையாளும் பொழுது ஆங்கில முறை, ஜெர்மானிய முறை என இரண்டுமுறை உண்டு என்பதே
இதன் பொருள். ஒன்றில் ஒலித்தசை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்றில் ஒலித்தசை
மூடப்பட்டுள்ளது. ஒலித்தசை திறந்துள்ள பொழுது, உயிரொலியைத் தெளிவாக உச்சரிக்கலாம்.
ஒலித்தசை மூடப்பட்டுள்ளபொழுது, உயிரொலி உச்சரிக்கப்படுமாயின் விட்டிசைத்தல் முன்னர்த்
தோன்றும்.
கூய், நாய்க் ஆகிய
மொழிகளைத் தவிர வேறு எந்தத் திராவிட மொழியிலும் குரல்வளை வெடிப்பொலி என்பது ஒலியன்
அன்று. தமிழ், கோலாமி, கோந்த் மொழிகளின் பல்வேறு வட்டார வழக்குகள் ஆராயப்பட்ட
பொழுது குரல்வளை வெடிப்பொலியானது சொல்லிறுதியில் வருவது கவனிக்கப்பட்டது. குறிப்பாக
எண்ணுப் பெயர்களில் இப்போக்கு உள்ளது. சில தமிழர்களின் பேச்சில் மொழி முதல் உயிருக்கு
முன்னரும் மொழியீற்று உயிரொலிக்குப் பின்னரும் குரல்வளை வெடிப்பொலி (விட்டிசைத்தல்)
வருவதை நான் கவனித்துள்ளேன்.
வருமொழி வெடிப்பொலி
மீதான விளைவுபற்றிய ஒரு குறிப்பு (
A Suggested effect on
following plosive)
மொழிமுதல் அடைப்பொலியின் உச்சரிப்பில் இம்மாறுபட்ட
இரண்டு ‘இடைவெளிகளின்’ விளைவானது மாறுபட்டதாயிருக்கும் என்பது இதன் பொருள். திராவிட
மொழிகளில் சிலவிடங்களில், மொழியிறுதி உயிருக்குப் பின்னால் வரும் வருமொழிகளின் முதல்
வெடிப்பொலியானது இரட்டிக்கின்றது. வேறு இடங்களில் இவ்வாறு நிகழ்வதில்லை. குரல்வளை
வெடிப்பொலியுடன் கூடிய இடைவெளியே இத்தகைய வெடிப்பொலி இரட்டித்தலுக்குக் காரணம் எனக்
கொள்வதில் தவறில்லை. பொதுவாக ஓரசைக்கு மேலுள்ள சொற்கள், இறுதி உயிருக்கு முன்னால்
வருமொழி முதல் வெடிப்பொலி இரட்டிக்கும். சான்று: “பார்த்துக் கொண்டேன்”. ஆனால்
இதற்கும் விதிவிலக்கு உண்டு. குரல்வளை வெடிப்பொலி இன்றி, பொருளை அறிதற்கெனத் திறந்த
இடைவெளி இருப்பது தேவையெனின் இரட்டிப்பு நிகழ்வதில்லை. சான்று: “கத்து-கடல்”.
இக்கொள்கை ஏற்கப்படுமாயின் சந்தி விதிகளைப் புரிந்து கொள்வது எளிமையானதாகும். இவ்
இடைவெளிகளில் உள்ள மாற்றங்களைப் பதிவாகியுள்ள வழக்குகளிலிருந்து கண்டுணரலாம்.
|
26.
Daniel Lones :
An outline of English
Phonetics, p 151, 1960.
|
|