|
தமிழ் மொழி வரலாறு
55
பாட்டைக் கவனித்திருக்க
வேண்டும். ‘
S’ என்னும் வடிவம் தனது வளைவு
முடிவிலிருந்து நேர் கீழாக எழுதப்பட்ட செங்குத்துக் கோட்டை ஊன்றுகோலாகக் கொண்டு
நிற்பதைப் போல அதற்குத் தொடர்பான நுனியண்ண வெடிப்பொலி காணப்படுகிறது. தென்னகப்
பிராமியில் உள்ள நுனியண்ண வெடிப்பொலியின் வரிவடிவமானது அசோகரது கல்வெட்டுக்களின்
பிராமி வரிவடிவத்தில் நாவளை வெடிப்பொலி, நுனிநா பல் வெடிப்பொலி ஆகியவற்றிற்குரிய
எழுத்துக்களின் சேர்க்கையால் உருவாக்கப்பட்டதாகும். நுனியண்ண வெடிப்பொலியின் பிராமி
வரிவடிவம் கண்டுபிடிக்கப் படுவதற்குக் காரணமாக இருந்தவர் யாராகினும் சரி அவர் இவ்வொலி
நாவளை வெடிப்பொலிக்கும் நுனிநாபல் வெடிப்பொலிக்கும் நடுவில் அமைகிறது என்பதை
உணர்ந்திருக்க வேண்டும். தொல்காப்பியர் விவரிப்பது போல நுனியண்ண மூக்கொலியை
உச்சரிக்கையில் நாவில் வளைவு ஏற்படுவதைக் குறிப்பதுபோல அவ்வொலியின் பிராமி வரிவடிவம்
அமைந்துள்ளது. இதைப்பற்றி பின்னர் ஆராய்வோம்.
கல்வெட்டுக்களில்
காணப்படும் சில எழுத்துப் பிழைகளை நாம் தள்ளிவிடவேண்டும். சான்றாக னகரம்
சிலவிடங்களில் நகரமாகவும் ணகரமாகவும் எழுதப்பட்டுள்ளது.
சில வடமொழி ஒலிகள்
இல்லாமை
ஒலிப்புடை
வெடிப்பொலிகள் (
Voiced plosives), மூச்சுடை
வெடிப்பொலிகள் (
Aspirated plosives) முதலியன இக்கல்வெட்டுக்களில் காணப்படவில்லை. முன்னரே குறிப்பிட்டதுபோலக் குற்றுயிர்களான
எகரமும் ஒகரமும் அவற்றுக்கு இனமான நெட்டுயிர்களிடமிருந்து தெளிவாக வேறுபடுத்தப்பட்டுள்ளன.
நாவளை ஒலிப்புடை உரசொலியாகிய (
Retroflex Voiced Fricative) ழகர மெய்யும் நாவளை மருங்கொலி ஆகிய
(Retroflex lateral)
ளகர மெய்யும் காணப்படுகின்றன. ‘ஐ’, ‘ஒள’ முதலிய சந்தியக்கரங்களும்
(
Diphthongs
)
ரு, லு முதலிய அசையொலிளும் காணப்படவில்லை. நுனிநா பல் குழிந்துரசொலியைத் தவிரப் பிற
குழிந்துரசொலிகளும் (
Sibilants) காணப்படவில்லை. அந்தக் குழிந்துரசொலியும் பிறவிடங்களில் மூலத்திராவிட மொழி இடையண்ண
வெடிப்பொலியாகவே ஆகிவிடுகிறது.
தென் மாவட்டக் குகைக்
கல்வெட்டுக்களின் மொழி “தமிழ் மொழி போன்றதொரு மொழி” (
Something like
Tamil
) அல்லது
|