|
தமிழ் மொழி வரலாறு 56
மூலத் தென் திராவிட மொழி (
Proto-South
Dravidian) என்பதை, மேலே ஆராயப்பட்ட செய்திகள்
தெளிவாகச்சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் இக்குகைக் கல்வெட்டு மொழி தமிழ், பிராகிருதம்
ஆகிய மொழிகளின் “கலப்பு மொழி” (
Hybrid language) போல இருப்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் பிராகிருதத்தில் பேரறிஞர்களாயிருந்த
போதிலும் தமிழைத் தாய் மொழியாக உடையோரல்லர். தமிழ் மக்கள் புரிந்து
கொள்வதற்காகவென்றே அவர்கள் இக்கல்வெட்டுக்களைச் செதுக்கினார்கள்.
குகைக் கல்வெட்டுக்களின்
ஒரு தனிச் சிறப்பியல்பு
இக் கல்வெட்டுக்களே ஈழம் பற்றிக் குறிப்பதாலும் , இவை
இலங்கையில் காணப்படும் குகைக் கல்வெட்டுக்களை ஒத்து அமைந்திருப்பதாலும், சிங்கள
மொழியின் செல்வாக்கு இவற்றில் இருக்கக்கூடுமோ என எதிர்பார்க்கலாம். இரட்டித்த
மெய்கள் சில இடங்கள் தவிர, ஏனைய இடங்களிலெல்லாம் தனி மெய்களாலேயே
குறிக்கப்படுகின்றன. பிராகிருதத்துடன் ஒப்பு நோக்குகையில் இது சிங்களமொழியின் தனிச்
சிறப்பியல்புகளில் ஒன்றாகும். இவ்வியல் முழுதும் இக்கருத்தே கொள்ளப்பெற்றுள்ளது.
கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த தொல்காப்பியத்தில் தனிமெய் இரட்டித்தமை
என்ற வேற்று நிலை வழக்கு நிலைபெற்றிருத்தலின் குகைக் கல்வெட்டுக்களில் காணப்பெறும்
தமிழமைப்பிலும் வரிவடிவில் சுட்டப்பெறாவிட்டாலும் இவ்வழக்கு இருந்ததாகவே கொள்ள
வேண்டும்.
ஒரு குடும்ப மொழியின்
வரிவடிவத்தால் பிறிதொரு குடும்ப மொழி எழுதப்படும் பொழுது, அவ்வெழுத்துக்களின் ஒலியன்
மதிப்பை அளந்தறியப் பின்பற்றப்படும் வழிமுறையை விளக்குவதற்காகவே இதுகாறும் இவை
விரித்துக் கூறப்பட்டன.
ஒலியன்கள்
(
Phonemic
Inventory)
உயிர்கள்
|