|
தமிழ் மொழி வரலாறு 58
க், ச், த், ப், ஆகிய நான்கு
வெடிப்பொலியன்கள் மட்டுமே மொழிக்கு முதலில் வருகின்றன. நாவளை வெடிப்பொலியும் நுனியண்ண
வெடிப்பொலியும் மொழிக்கு முதலில் வருவதில்லை. வெடிப்பொலிகள் எதுவும் மொழிக்கு இறுதியில் வருவதில்லை. ஆனால் எல்லா வெடிப்பொலிகளும் மொழி இடையில் உயிர்கட்கு இடையிலும், தங்களது
இன மூக்கொலிகளுக்கு அடுத்தும் (‘ங் க்’ என்பது மட்டும் விதிவிலக்காக வருவதில்லை)
வருகின்றன. ‘dh’ என்பதைத் தவிர ஒலிப்புடை
வெடிப்பொலி எதுவும் காணப்படவில்லை.
மூக்கொலிகள்
கடையண்ண மூக்கொலி, இடையண்ண மூக்கொலி, நாவளை
மூக்கொலி, நுனியண்ண மூக்கொலி, நுனிநா பல் மூக்கொலி, ஈரிதழ் மூக்கொலி முதலிய
மூக்கொலிகள் காணப்படுகின்றன. ஈரிதழ் மூக்கொலி மொழி இடையில் தனது இன
வெடிப்பொலிகளுக்கு முன்னரும் மொழி முதலில் உயிருக்கு முன்னரும் வருகிறது. இது ஒலியனாகத்
தொடர்ந்து திகழ்கிறது. நுனிநா பல் மூக்கொலியும் இவ்வாறே மொழிக்கு முதலிலும் இடையில்
இனவெடிப்பொலிகளுக்கு முன்னரும் வருகிறது. எழுதுவோர் நுனிநா பல் மூக்கொலிக்கும், நுனியண்ண
மூக்கொலிக்கும் இடையே வேறுபாட்டினைக் கண்டனர் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.
இவ்விரண்டும் தனித்தனி ஒலியனாகலாம். சில இடங்களில் நுனிநா பல் மூக்கொலி மொழிக்கு
இறுதியில் வருகிறது. நுனியண்ண அல்லது நாவளை மூக்கொலிக்குப் பதிலாக, தவறாக இது எழுதப்
பட்டிருக்கலாம். இடையண்ண மூக்கொலி மொழி முதலிலோ, இறுதியிலோ வரவில்லை. ஆனால்
மொழிக்கு இடையில் மெய்யாக, இடையண்ணச் சகரத்திற்கு முன்னர் வருகிறது. அது ஒலியன்
நிலையினை இழந்து விட்டது என நினைப்பதற்குக் காரணம் எதுவும் இல்லை.
இடையின மெய்கள் அல்லது
மூக்கினம் சாராத அதிர் ஒலிகள் (
Non-nasal Sonorants)
நாவளை, நுனியண்ண மருங்கொலிகள் வருவது பற்றியும், நாவளை
ஒலிப்புடை உரசொலி பற்றியும் முன்னரே குறிப்பிட்டோம். இவை மொழிக்கு முதலில்
வருவதில்லை. ரகரம், மொழி இறுதியிலும் இடையிலும் வருகிறது. எஞ்சியுள்ள யகரமும் வகரமும்
|