பக்கம் எண் :

New Page 4
 

தமிழ் மொழி வரலாறு

59

மொழிக்கு முதலில் வருகின்றன. மொழி முதலில் உயிரொலியையுடைய ஒரு சொல் தொடரும் பொழுது இகரத்திற்கு அடுத்தபடி யகரம் ஒரு உடம்படுமெய் ஆகத் தோன்றுகிறது. யகரத்துடன் தொடங்கும் பிற மொழிச் சொல் முன் வைப்புயிர் ஆகிய (Prothetic) ‘இ’ யைப் பெறுகிறது. சான்று : யக்ஷ > இயக்கன். சிரியகன் எனும் சொல் சீர் + இயக்கன் என்பதிலிருந்து தோன்றியது. இயக்குவன் என்ற வடிவம் குறிப்பிடத்தக்கது. உகரம் தொடர்ந்தாலும் யகரம் மொழி முதலாக வருகிறது ; சான்று : ‘யுள்’ (இச்சொல்லின் பொருள் தெரியவில்லை). ஆனால் தொல்காப்பியத்தின்படி மொழி முதலில் யகர மெய்யுடன் ஆகாரம் மட்டுமே வரும். இம்மாறுபாடு பிராகிருத மொழிச் செல்வாக்கின் விளைவாகலாம். உடம்படுமெய் இல்லாத பல சொற்கள் இருப்பதால், கல்வெட்டு வரிவடிவம் உயிர் மயக்கங்களைக் (Vowel Clusters) குறிப்பதாகக் கொள்ளலாம்.

மெய்களைப் பொறுத்தவரையில் மெய்ம் மயக்கங்கள் மொழி முதலிலோ அல்லது ஈற்றிலோ வருவதில்லை. மொழி இடையிலேயே வருகின்றன.

உயிர்கள்

அ, எ, இ, ஒ, உ முதலிய ஐந்தும் உயிரொலியன்களாகத் தொடர்ந்து வருகின்றன எனக் கொள்ள வேண்டும். உயிர்களைப் பொறுத்த வரையில் நெடுமை ஒலியன் தன்மையுடையதே; ஆயினும், அவ்வளவைச் சரியாக வரையறுப்பது கடினமே ஆகும். உயிர்கள் மொழி முதலில் வருகின்றன. தொல்காப்பியம் விளக்கி இருப்பது போன்ற “அ கி, இ ஒ, ஆ அ” முதலிய உயிரொலி மயக்கங்களும் (Vowel Clusters) காணப்படுகின்றன. தொல்காப்பியர் அளபெடைகள் எனக் குறிப்பிடும் குறில் தொடர்ந்த நெடில் உயிர்கள் காணப்படுவதையும் குறிப்பிட வேண்டும். அதன் அமைப்பு வருமாறு :

1 + உ2 ={ கு }22 ~ { கு }உ2 *
நெ
நெ

எடுத்துக்காட்டாகச் செய்தான் என்பது செய்த + அன் ஆகும். ‘ஆ அன்’ என்பது ‘ஓன்’ எனவும் வருகிறது. இது தொல்காப்பியத்


* உ = உயிர்; கு = குறில்; நெ = நெடில்.