|
தமிழ் மொழி வரலாறு 6
3. 3
உரையாசிரியர்கள்
உரையாசிரியர்கள் மூலநூல் முழுவதற்குமே விளக்கம் கூறப் பெரிதும்
முற்பட்டிருக்கிறார்கள். தம் காலத்திய வழக்காறுகளுக்கெல்லாம் தொல்காப்பியத்தைத் தக்க
முறையில் விளக்குவதன் மூலம் அந்நூலிலேயே விதிகளைக் காண முற்படுவதை இங்குச் சான்றாகச்
சுட்டலாம்.3
பல்வேறு காலங்களில் எழுதப்பட்ட இவ்வுரை வேறுபாடுகள், பழைய நூல்களில் குறிப்பிட்டுக்
கூறப்படும் வழக்காறுகளிலிருந்து மாறுபட்டனவும், புதிதாய் நிலைபெற்றனவுமான தம் காலத்திய
வழக்காறுகளைப் பற்றிய பொதுவான செய்திகளை அறிய உதவுகின்றன. இம்முறையில் இவ்வுரைகளுக்கு
இடையிலுள்ள வேறுபாடுகளெல்லாம் கால வேறுபாட்டின் காரணமாக மாறிய வழக்காறுகளின்
அடிப்படையில் அமைகின்றன. நிலைபெற்ற வழக்காறுகளிலிருந்து தம் காலகட்டத்தை ஒட்டி
மொழியமைப்பில் ஏற்பட்ட சில மாறுதல்களை இந்த உரையாசிரியர்கள் உணர்ந்தே உள்ளனர்.
எனவே மொழியானது மாறுதலுக்கு உள்ளாகிறது என்பதையும் அவர்கள் உணர்ந்தே இருந்தனர் எனக்
கருதலாம். உரையாசிரியர்களின் அடிப்படை ஆதார நூலான தொல்காப்பியமே “கடிசொல் இல்லை
காலத்துப் படினே” எனக் கூறுகிறது.4
எனவே மொழியில் நிகழும் மாறுதல்களுக்கு அவை இலக்கிய வழக்கினைக் குறிப்பனவாயிருப்பினும்,
சான்றுகள் இவ்வுரை நூல்களில் உள்ளன எனலாம். எனவே மொழி வரலாற்றின் பல்வேறு
காலகட்டங்களின் அடிப்படையில் பல்வேறு மொழி வழக்காறுகளை வேறு பிரித்து அறிந்து
கொள்வதற்கு இவ்வுரை நூல்களையும் அவ்வுரை விளக்கத்திற்கு அடிப்படையான இலக்கியங்களையும்
கவனமாக ஆராய்ந்து ஒப்பிட்டுக் காணல் வேண்டும்.
3. 4 வெளிநாட்டவர்
எழுதிய இலக்கணங்கள்
தமிழ்ச் சான்றோர் எழுதிய இலக்கண நூல்களைத் தவிர வெளிநாட்டவர், குறிப்பாக
மதபோதகர்கள், வெளிநாட்டவர் தமிழைக் கற்கும் வகையில் எழுதிய இலக்கண நூல்களும் உள்ளன.
மேற்கத்திய நாடுகளோடு கொண்ட தொடர்புகளின் முக்கியமான
|
3.
தொல்காப்பியம் 147 நச்சினார்க்கினியர் உரை.
4.
தொல்காப்பியம் 935.
|
|