பக்கம் எண் :


தமிழ் மொழி வரலாறு

7

விளைவுகளில் இதுவும் ஒன்றாகும். போர்ச்சுக்கீசிய மொழியில் தமிழ் இலக்கணநூல் ஒன்று இருந்ததாம். ஆனால் அது நமக்கு இன்று கிடைக்கவில்லை. டச்சுக்காரரான பால்தே(Baldaeus) என்பார் எழுதிய இந்தியாபற்றிய நூலில் தமிழ்மொழி பற்றிய ஒரு பிரிவு உள்ளது. தமிழ் மொழியின் உச்சரிப்புக்கள், அதன் பெயர்ச் சொற்களின் வேற்றுமைப் பாகுபாடுகள், வினைச்சொற்களின் வினை விகற்ப வாய்பாடுகள் முதலியவற்றோடு இயேசு பெருமான் மீதான ‘கர்த்தர் கற்பித்த செபத்தின்’ (Lord’s Prayer) தமிழாக்கம் ஒன்றினையும் இதில் இணைத்துள்ளார்.5 தமிழ்ச்சொற்கள் இந்நூலில் டச்சு நெடுங்கணக்கில் எழுதப்பட்டுள்ளன. தக்காணக் கல்லூரி ஆண்டு இதழில் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.6 1680 ஆம் ஆண்டில் கோஸ்டா பால்த்சரா (Costa Balthsara)7 என்பார் தமிழ் இலக்கணம் ஒன்றை இலத்தீன் மொழியில் எழுதினார். புருனோ (Bruno) என்பார் 1685 ஆம் ஆண்டில் ஒரு தமிழ் இலக்கணநூல் எழுதியதாக அறிகிறோம்.8 ஆனால் இதுகாறும் இந்நூல் பதிப்பிக்கப்படவில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் தரங்கம்பாடிச் சமயப் போதகர் குழுவைச் சேர்த்த சீகன்பால்கு (Ziegenbalg) தமிழ் இலக்கண நூல் ஒன்றை எழுதினார்9 (‘ச்’ என்னும் ஒலியை ‘tsch’ எனக் குறித்தல் காண்க). பின்னர் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் பேச்சுத் தமிழின் இலக்கணம் ஒன்றை எழுதினார்.10 அதனுடைய சிறப்பினைக் குறைத்து மதிப்பிட முடியாது.



5. Baldaeus, Amsterdam, 1672.
6.
J. A. B. Van Buttenen and P. C. Ganeshsundaram :

“A Seventeenth Century Dutch Grammar of Tamil” The Bulletin of the Deccan College.Vol, 14, p p 168-182.

7. Costa Balthsara Da :

Arte Tamulica, Verapoli, 1680.

8. Kamil Zvelebil :

“A Czech Missionary of the Eighteenth Century,as author of a Tamil Grammar”, Tamil Culture Vol. VI,No.4,p 338. Oct. 1955.

9. B. Ziegenbalg :

“Grammatica Damulica” Halae, 1716.s

10. C. S. “Beschi :

Grammar of the Common Dialect of the Tamulian”(Translation), Vepery, 1806.