தமிழ் மொழி வரலாறு
72
பிறப்பைப் பற்றிக் கூறுகையில்
ஒலித்தசைகளின் அதிர்வின் விளைவான ஒலிப்புடைமையை ‘மிடற்றுப் பிறந்தவளி’ எனத்
தொல்காப்பியர் குறிக்கிறார்.12 மூக்கொலிகளைப் பற்றிக் கூறுகையில் மூக்கொலி இசைமையைக் (
Nasal
Resonance) குறிக்கிறார்.13
என்றாலும் பிற இடையின ஒலிகள், ஒலிப்புடை ஒலிகள் ஆகியவற்றின் பிறப்பை விளக்குகையில்
தொல்காப்பியர் இத்தகைய செய்திகளைக் கூறவில்லை. வெடிப்பொலிகள் ஒலிப்புடை ஒலிகளா
அல்லது ஒலிப்பிலா ஒலிகளா என்பதைப் பற்றியும் அவர் ஏதும் கூறவில்லை.
ஒலிகளின் பட்டியல்
இடம் (
Point
of Articulation), ஒலிப்பான் (
Articulator) ஆகியவற்றின் அடிப்படையில் தொல்காப்பியம் பின்வரும் ஒலிகளின் பிறப்பை விளக்குகிறது.
முதலில் ‘அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள’ என்றும் உயிரொலிகள்
விளக்கப்படுகின்றன. பின்னர் “க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ற், ம், ன், ய்,
ர், ல், வ், ழ், ள்” என்றும் மெய்யொலிகள் விளக்கப்படுகின்றன. இவை தவிர வேறு மூன்று
ஒலிகளும் உண்டு. அவை வருமாறு :
1 ஆய்தம்.
2 குற்றியலுகரம்.
3 குற்றியலிகரம்.
‘எழுத்து’ என்ற
சொல்லே தொல்காப்பியத்தில் ஆளப்பட்டுள்ளது. பொதுவாக இச்சொல் ‘எழுது’ என்பதன்
அடியாகப் பிறந்ததாகக் கூறுவர். ஆனால் ‘எழுது’ என்ற சொல்லே ‘எழு’ என்ற
வேர்ச்சொல்லைக் கொண்டுள்ளது.
12.
தொல்காப்பியம், 84,
99
“அவ்வழிப்,
பன்னீ ருயிரும்
தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த
வளியின் இசைக்கும்”.
“அண்ணம் சேர்ந்த
மிடற்றெழு வளியிசை
கண்ணுற் றடைய யகாரம்
பிறக்கும்”.
13.
தொல்காப்பியம், 100
“மெல்லெழுந் தாறும்
பிறப்பின் ஆக்கம்
சொல்லிய பள்ளி நிலையின வாயினும்
மூக்கின் வளியிசை
யாப்புறத் தோன்றும்”.
|
|