பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

73

(‘-து’ என்பது சொல்லாக்கஅசையாகக் கொள்ளப்பட்ட நிலையில்) ‘எழு’ என்ற சொல்லை ‘ஒலியை உச்சரித்தல்’ என்ற பொருளில் தொல்காப்பியர் பயன்படுத்துகிறார்.14 எழுத்தின் அளவைப் பற்றியும் அவர் பேசுகிறார்.15 எனவே தொல்காப்பியர் ‘எழுத்து’ என்பதை ‘ஒலி’ என்ற பொருளிலேயே வழங்கியிருக்க வேண்டும். எனினும் இச்சொல்லை ‘வரி வடிவம்’ என்ற பொருளில் அவர் பயன்படுத்தும் இடங்களும் உண்டு.16

மெய்யொலிகளின் ஒலிப்பு

கடை, இடை, நுனி என மூன்று பகுதிகளாக நாக்கு பிரித்துக் கொள்ளப்படுகிறது. வல்லண்ணத்தையும் மெல்லண்ணத்தையும் உள்ளடக்கிய அண்ணத்தை இங்ஙனம் தொல்காப்பியர் பகுக்கிறாரா


14. தொல்காப்பியம், 6

“நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்”.

15. தொல்காப்பியம், 3, 4, 11, 12

“அவற்றுள்
அ இ உ எ ஒ என்னும்
அப்பால் ஐந்தும்
ஓரளவு இசைக்குங் குற்றெழுத் தென்ப”.
“ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும்
அப்பால் ஏழும்
ஈரளபு இசைக்கும் நெட்டெழுத் தென்ப”.
“மெய்யின் அளபே அரையென மொழிப”.
“அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே”.

16. தொல்காப்பியம், 14, 15, 17

“உட்பெறு புள்ளி உருவா கும்மே”.
“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்”.
“புள்ளி யில்லா எல்லா மெய்யும்
உருவுரு வாகி அகரமோ டுயிர்த்தலும்
ஏனை உயிரோடு உருவுதிரிந் துயிர்த்தலும்
ஆயீ ரியல உயிர்த்த லாறே”.