தமிழ் மொழி வரலாறு
76
உரசொலிகள்
நுனியண்ண, நுனிநா
ஒலிகளாக அமைந்துள்ள இரண்டாவது பிரிவு ஒலிகள் ரகர மெய்யும் ழகர மெய்யுமாகும்.
தொல்காப்பியர் “ஒற்று”, “வருடு” என்ற சொற்களால் முறையே “ற், ன்” ஆகியவற்றின்
பிறப்பை வேறுபடுத்துகிறார்.21
‘வருடு’ என்பது வருடொலி, உரசொலி அல்லது நாவானது அண்ணத்தை முழுமையாகத் தொட்டு நிற்காத
நிலையில் பிறக்கும் ஒலியைக் குறிக்கலாம்.
மருங்கொலி
மூன்றாவது பிரிவில் உள்ள ஒலிகள் ல், ள் என்பனவாகும்.22
பல்லின் வேரை ஒட்டிய அண்ணப் பகுதியை நாவானது ‘ஒற்ற’ லகர மெய் பிறக்கிறது.
நாவிளிம்பில் விறைப்பு ஏற்படுகிறது. இதே நிலையில் ‘வருடல்’ நிகழ, ளகர மெய் பிறக்கிறது.
‘வருடலால்’ பிறக்கும் ளகர, ழகர மெய்களுக்கு இடையிலான வேறுபாடு இதுதான்; ளகர மெய்
ஒலிக்கப்படும் பொழுது பற்களை நோக்கி நா சற்று முன் செல்கிறது. நாவிளிம்பில் விறைப்பு
ஏற்படுகிறது. இதனாலேயே ளகர, ழகர மெய்கட்கு இடையில் பல்லவர் காலத் திறுதியில் மயக்கம்
ஏற்பட்டு இருக்கலாம். இன்றைய தமிழில் ளகர மெய் நாவளை மருங்கொலியாகவும் அதற்கு இணையான
லகர மெய் “முன் (front) மருங்கொலியாகவும்’
உள்ளன. இவ்வளர்ச்சி பற்றிப் பின்னர் விளக்கப்படும்.
நுனிநாப்
பல்லொலிகளான தகர மெய்யும் நகர மெய்யும் ‘பல்லெயிற்றொலி’ (gingival) களாகும். ‘பல் முதல் மருங்கில்’ நாநுனி பரந்து ‘ஒற்ற’, அவை பிறக்கும் எனத்
தொல்காப்பியர் பேசுகிறார்.23
21.
தொல்காப்பியம், 95
“நுனிநா அணரி அண்ணம் வருட
ரகாரம் ழகாரம்
ஆயிரண்டும் பிறக்கும்”.
22.
தொல்காப்பியம், 96
“நாவிளிம்பு வீங்கி
அண்பல் முதலுற
ஆவியின் அண்ணம்
ஒற்றவும் வருடவும்
லகாரம் ளகாரம்
ஆயிரண்டும் பிறக்கும்”.
23.
தொல்காப்பியம், 93
“அண்ணம் நண்ணிய
பல்முதல் மருங்கின்
நாநுனி பரந்து மெய்யுற
ஒற்றத்
தாம் இனிது பிறக்கும்
தகார நகாரம்”. |
|