பக்கம் எண் :

டகர
 

தமிழ் மொழி வரலாறு

77

டகர மெய்யும் ணகர மெய்யும், முன்னரே குறிப்பிட்டது போல நுனியண்ணப் பகுதியை நுனிநா அல்லது நாவிளிம்பு பொருந்தப் பிறக்கின்றன. ஆனால் இவை உண்மையில் அண்ண முடியைத் தொடும் ஒலிகளல்ல.

ஈ. கீழிதல் ஒலிப்பானாக இருத்தல்

1 ஈரிதழொலி

பகர மெய்யும் மகர மெய்யும் ஈரிதழ் ஒலிகளாக விளக்கப்படுகின்றன.24

2 பல்லிதழொலி

வகர மெய் பல்லிதழொலியாக விளக்கப்படுகிறது.25 இவ்வொலி ஈரிதழ் ஒலியாக இருந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் பின்னர் ஆராயப்படும்.

ய், ர், ல், வ், ழ், ள் முதலியவை இடையின மெய்களாகும்.26 இவற்றில் வ், ர், ல், ள், ழ் ஆகியவற்றின் பிறப்பு முன்னரே ஆராயப்பட்டது. யகர மெய்யின் பிறப்பு இங்கு ஆராயப்படும்.

யகர மெய் ஒலிப்புடை ஒலியாகும். இடையண்ணத்தில் சற்று அழுத்தத்துடன் ஒலி பிறக்கிறது.27 இதுபற்றித் தொல்காப்பியம் கூறும் விளக்கம் தெளிவாக இல்லை.

உயிரொலிகள்

தொல்காப்பியர் பன்னிரு உயிர்களைப் பற்றிப் பேசுகிறார். எல்லா உயிரொலிகளின் பிறப்புப் பற்றிப் பேசுகையில் ‘மிடற்றுவளி’


24. தொல்காப்பியம், 97

“இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்”.

25. தொல்காப்பியம், 98

“பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும்”.

26. மூக்கினமல்லா அதிர்வொலிகள் ( Non-nasal Sonorants) என இடையின மெய்களை
ஆசிரியர் குறிக்கிறார். இடையின மெய்கள் அனைத்தும் அரை உயிர்கள்
( Semi Vowels) என்பது ஆசிரியரின் கருத்தாகும்.

27. தொல்காப்பியம், 99

“அண்ணம் சேர்ந்த மிடற்றெழு வளியிசை
கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும்”.