தமிழ் மொழி வரலாறு
78
என்ற தொடரைப்
பயன்படுத்துகிறார். ஒலித்தசையின் அதிர்வால் ஒலியுறுப்புக்களில் ஏற்படும் இசைமையைக்
குறிப்பதாக இதற்கு நாம் விளக்கம் தரலாம். ஒலிப்பு முறைகளை அடிப்படையாகக் கொண்டு
தொல்காப்பியர் உயிரொலிகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார். அவை பின்வருமாறு.
1. அ, ஆ; 2. இ, எ, ஏ, ஐ;
3. உ, ஊ, ஒ, ஓ, ஒள. அகரமும் ஆகாரமும் வாயைத் திறத்தலாலேயே பிறக்கின்றன.28
நாவானது இயல்பான நிலையில் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கக் கூடும். இது ‘அ, ஆ’
ஆகிய உயிர்களைக் கீழ்நடு உயிர்களாக்கும் இரண்டாவது பிரிவில் முன் உயிர்கள் உள்ளன.
பல்லை நுனிநா ‘விளிம்புற’ இவை பிறக்கும்.29
முன் உயிரொலிகள் பற்றிய ஒலிப்பினை அறிய எடுக்கப்பெறும் அண்ணப் படங்களில்
இடையண்ணத்தின் நடுவில் ஒலிகளின் ஒலிப்புக்கு ஏற்ப அகலமுடைய தொடப்படாத பகுதி உள்ளது.
தொடுதல் நாவின் எஞ்சிய பகுதியின் அருகிலும் அப்பாலும் நிகழ்கிறது. இந்த நூற்பா
தெளிவாக இல்லாத போதும் தொல்காப்பியர் இத்தகைய விளக்கத்தையே தருகிறார் எனக்
கொள்வது தவறாகாது. மூன்றாவது பிரிவு உயிர்கள் தொல்காப்பியத்தின்படி ‘இதழ் குவிதல்’
ஆகிய தன்மையைப் பெற்றுள்ளன.30
இதைத் தொல்காப்பியர் குறிப்பிடுவதிலிருந்து இரண்டாவது பிரிவு உயிர்கள் ‘இதழ் குவிதல்’
தன்மையைப் பெற்றில எனக் கொள்ளலாம். கடைநா உயர்தலைப் பற்றித் தொல்காப்
28.
தொல்காப்பியம், 85
“அவற்றுள்
அ ஆ ஆயிரண் டங்காந்
தியலும்”.
29.
தொல்காப்பியம், 86
“இ ஈ எ ஏ ஐ என
இசைக்கும்
அப்பால் ஐந்தும்
அவற்றோரன்ன
அவை தாம்
அண்பல் முதல்நா
விளிம்புறல் உடைய”.
30.
தொல்காப்பியம், 87
“உ ஊ ஒ ஓ ஒள என
இசைக்கும்
அப்பால் ஐந்தும்
இதழ்குவிந் தியலும்”.
|
|