பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 320 -

பல காப்பியங்களும் புராணங்களும் தூதுநூல்களும் கோவைகளும் உலாக்களும் பரணி குறவஞ்சி முதலியனவும் அவரால் சிறந்த முறையில் பதிப்பிக்கப்பட்டன. புறநானூறு, பத்துப்பாட்டு, பதிற்றுப்பத்து முதலியவற்றின் பதிப்பில் அவர் எழுதியுள்ள குறிப்புகள் எல்லாம் உயர்ந்த ஆராய்ச்சிக் கருவூலங்கள் ஆகும். மணிமேகலை கதைச் சுருக்கம், புத்த தர்மம், உதயணன் கதைச் சுருக்கம் என்பவை அவர் பழைய நூல்களை ஒட்டி எழுதிய உரைநடை நூல்கள். தம் ஆசிரியராகிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வரலாற்றை விரிவாக எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாற்று நூல்களுள் அது தனிச்சிறப்பு உடையது. இன்னும் சிலருடைய வாழ்க்கை வரலாற்று நூல்களும் எழுதியிருக்கிறார். ‘நான் கண்டதும் கேட்டதும்’, ‘பழையதும் புதியதும்’, ‘நல்லுரைக் கோவை’, ‘நினைவு மஞ்சரி’ என்பவை அவருடைய கட்டுரைத் தொகுப்புகள். அவற்றின் நடை, எளிமையும் தெளிவும் வாய்ந்தது. பிழையற்ற எளிய தமிழில் நூல்கள் எழுதிய இந்த நூற்றாண்டின் உரைநடை வளர்ச்சிக்குத் தொண்டு புரிந்தவர் அவர். கவிதைகள் இயற்றுவதிலும் தேர்ந்தவராக இருந்தும், அவர் அத்துறையில் புகழ் பெறவில்லை. அவருடைய ஆராய்ச்சிக் குறிப்புகளும் தெளிவான கட்டுரைகளும் வாழ்க்கை வரலாற்று நூல்களும் இந்த நூற்றாண்டின் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவை. தமிழுக்காக வாழ்ந்த அவருடைய பெருவாழ்வு தமிழுக்கு உயர்ந்த புகழைத் தேடித் தந்தது எனலாம். அதனால்தான்,

             பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
                காலமெலாம் புலவர் வாயில்
           துதிஅறிவாய்; அவர்நெஞ்சின் வாழ்த்து அறிவாய்;
                இறப்பின்றித் துலங்கு வாயே

என்று கவிஞர் சுப்பிரமணிய பாராதியாரால் அவர் வாயார வாழ்த்தப்பட்டார்.

மறைமலை அடிகள்

ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் உள்ள அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த பெரும்புலவர் மறைமலையடிகள் (1876 - 1950). சுவாமி வேதாசலம் என்பது அவருடைய பழைய வடமொழிப் பெயர். அதைத் தமிழாக்கிக்கொண்டார். இளமையிலேயே தமிழ் இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றும் ஆர்வமும் அவற்றில் புலப்பட்டன. பழைய இலக்கியங்களைப் பின்பற்றி முருகர் மும்மணிக்கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்ற செய்யுள் நூல்கள் இயற்றினார். அவற்றின் நடை ஆழமும் செறிவும் உடையது. அவர் எழுதிய