பக்கம் எண் :

32

Tamil Virtual University

நெல்லை, சேலம் மாவட்டங்களில் உள்ள நாட்டுக் கலைத் தொண்டர்களின் கூட்டு முயற்சியில் இந்நூல் உருவாகியுள்ளது. அவர்களுடைய முயற்சிக்குத் தமிழகம் கடமைப்பட்டுள்ளது. இந்நூலில் இடம் பெறும் நாட்டுப் பாடல்களைச் சேகரித்து அனுப்பிய நண்பர்களைப் பற்றித் தனியாகச் சில வார்த்தைகள் அடுத்த பகுதியில் கூறுவேன்.

முன்னர் வெளியிடப்பட்ட நாட்டுப்பாடல் நூல்களுக்குக் கிடைத்த ஆதரவு இந்நூலுக்கும் கிடைக்குமென நம்புகிறேன்.

பாளையங்கோட்டை

நா. வானமாமலை

8-4-1964