பக்கம் எண் :

66

Tamil Virtual University

பஞ்ச காலம்

அவருக்கு அருமையான தலைச்சன் குழந்தை பிறந்திருக்கிறது. வயலில் விதைத்த விதை முளைத்துப் பயன்தராதே என்று குழந்தையின் தந்தையும், பாட்டனும் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் ஏற்படும் மகிழ்ச்சி அந்த வீட்டில் இல்லை. பெற்றவன்கூடக் குழந்தையை மதிக்கவில்லையே என்று தாய் கவலைப்படுகிறாள் ; மணப்புறா போலவும், நீலப்புறா போலவும் உள்ள குழந்தையை அள்ளி எடுத்து அணைப்பதற்கு, உறவினர் முன்வராத நிலையைப் பஞ்சம் சிருஷ்டித்து விட்டதே என்று அவள் கவலைப் படுகிறாள்.

(குறிப்புரை :சின்னப்ப பாரதி)

  மானம் கவுந்து வரும்
மாடமணப்புறா மேஞ்சு வரும்
மணிப் புறா குஞ் சென்று
மதிப்பாரே பஞ்சமையா !
நீலம் கவுந்து வரும்
நீலப் புறா மேஞ்சு வரும்
நீலப் புறா குஞ்சென்று
நெனைப் பாரே பஞ்சமையா !

 

வட்டார வழக்கு: கவுந்து - கவிழ்ந்து -(மேகம் தாழ்ந்து வருவதைக் குறிக்கும்) ; மேஞ்சு - மேய்ந்து ; நெனைப்பாரே-நினைப்பாரே.

உதவியவர் : சி. செல்லம்மாள்
சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி

இடம் :
நாமக்கல் வட்டம்,
சேலம் மாவட்டம்.