| 
 
தாலாட்டு 
 தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் 
 பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும். பணக்காரர் வீட்டிலும் தாய் குழந்தையைத் தாலாட்டுகிறாள். 
 ஏழை எளியவரான மீன் பிடிப்பவரும், உழவரும், பண்டாரமும், தட்டாரும், கருமாரும், தச்சரும், 
 கொத்தரும் தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழிசையால் அமுதூட்டித் தாலாட்டுகிறார்கள். 
 காட்டு வெள்ளம் போல் வரும் தாயின் மன எழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள் 
 பிற்கால கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றி, பிள்ளைத் தமிழாகவும், தேவர் 
 தேவியர் தாலாட்டுகளாகவும், யாப்பிலக்கணக் கட்டுக்கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர். 
 தெய்வத் தாலாட்டிற்கு விளைநிலம் மக்கள் தாலாட்டுக்களே. 
 சில தாலாட்டுப் பாடல்களில் உண்மையான குழந்தையையும், அதில் தாலாட்டும் 
 தாயும் நம் கண் முன்னே வருகிறார்கள். 
	
		
			|  | பச்சை இலுப்பை வெட்டி பவளக்கால் தொட்டிலிட்டு
 பவளக்கால் தொட்டிலிலே
 பாலகனே நீயுறங்கு
 கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ
 சித்திரப் பூந்தொட்டிலிலே
 சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ
 சித்திரப் பூந் தொட்டிலிலே
 |    |