தனித்தனி நிகழ்ச்சிகளாகவும், தனித்தனிக் கருத்துக்களாகவும் பாடல்கள் நிற்கவில்லை.
ஒரு பொதுத் திட்டத்தின் அடிப்படையில் சமூக வாழ்க்கையில் பிரதிபலிப்பாக இவை நிற்கின்றன.
இந்நூலை உருவாக்கிய சேகரிப்பாளர்கள்
கு. சின்னப்ப பாரதி, எஸ். எஸ். போத்தையா, கவிஞர்
சடையப்பன், எஸ். எம். கார்க்கி, எம். பி. எம். ராஜவேலு, வாழப்பாடி சந்திரன்
ஆகியவர்கள் 12 ஆண்டுகளுக்கு முன்னால் மாதிரியே
இன்றும் நாட்டுப்பாடலில் ஆர்வம் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றி.
இந்நூலின் ஆய்வுக் குறிப்புகள், விவரக் குறிப்புகள், சேகரிப்புக்
குறிப்புகள் ஆகியவற்றை எழுதும் பணியில் விடா முயற்சியோடும், சலியாத ஆர்வத்தோடும் பணி
புரிந்த செல்வி
T
.மங்கைக்கு
எனது நன்றி.
இந்நூலின் இரண்டாவது
பதிப்புக்குச் சில புதிய குறிப்புகள் தந்த வ.உ.சி. கல்லூரித்
தமிழ் விரிவுரையாளர்
ஆ.சிவசுப்பிரமணி
யனுக்கும் எனது நன்றி,
12 ஆண்டுகளுக்கு முன்னர்
இதை வெளியிட்டது போலவே, இரண்டாவது முறையும் வெளியிட முன்வந்து, தமது நாட்டுப்பாடல் ஆர்வத்தினையும்,
கிராமத்து உழைப்பாளி மக்களின் கலைப் படைப்புகளைப் பரப்புகிற ஆசையையும் வெளியிடுகிற
வாய்ப்பை மேற்கொண்ட ‘
நியூ
செஞ்சுரி புக் ஹவுஸை’
நான் பாராட்டுகிறேன். நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
3-11-76 |
நா. வானமாமலை
தலைவர்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
முதுநிலை ஆய்வாளர்,
திராவிட மொழி இயல்கழகம்,
கருநாடகப் பல்கலைக்கழகம், தார்வர்.
|
|