இரு கைகளினாலும் கூப்பி வணங்கிய அரசனும், ஒன்றுடன் ஒன்று மோதும்படியான கயல்மீன் போன்ற
கண்ணையுடைய அழகிய குண்டலம் அணிந்த மன்னன் தேவியும் மக்களுக்கும் முனிவர்க்கும் கௌதமர்
உரைக்கும் தரும தத்துவங்களை மனம் பொருந்தி மகிழ்வுறக் கேட்டனர். அதன்பின்- (24)
நாக
பஞ்சமி கதையுரைக்க மன்னன் வேண்டுதல்
25. |
சிரிநற் பஞ்சமி செல்வக் கதையினை |
|
செறிகழல் மன்னன் செப்புக வென்றலும் |
|
அறிவு காட்சி யமர்ந்தொழுக் கத்தவர் |
|
குறியு
ணர்ந்ததற் கூறுத லுற்றதே. |
வீரக் கழல் அணிந்த மன்னன் மங்கலமான நல்ல பஞ்சமியின் பொருள் பொதிந்த கதையினை
உரைத்தருளுக என்று வேண்டினான். உடன்தானே ஞானக் காட்சியுடன் விரும்பும் ஒழுக்கத்தையுடையரான
பிறர் உள்ளக் குறிப்புகளை உணர்ந்த முனிவர் பஞ்சமி கதையினைக் கூறத் தொடங்கினார். (25)
கௌதமர்
உரைத்த பஞ்சமி கதை
மகத நாட்டு மன்னன் சயந்தரனும் அவன் சுற்றத்தாரும்
26. |
நாவலந் தீவி னற்பர தத்திடை |
|
மாவலர் மன்னர் மன்னு மகதநற் |
|
கூவுங் கோகிலங் கொண்மதுத் தாரணி |
|
காவுஞ்
சூழ்ந்த கனக புரம்மதே. |
நாவலந்தீவிலுள்ள
நல்ல பரத கண்டத்திலே மிகுவல்லமை கொண்ட மன்னவர் பலர் உறையும் மகத நாட்டில்,
கூவும் குயில்களும் மதுதாரை சிந்தும் மலர்களும் கொண்ட சோலைகள் சூழ்ந்த கனகபுரம்
உள்ளது. (26)
27. |
அந்ந கர்க்கிறை யான சயந்தரன் |
|
நன்ம னைவிவி சாலநன் னேத்திரை |
|
தன்சு தன்மதுத் தாரணி சீதரன |
|
நன்க
மைச்ச னயந்தர னென்பவே. |
கனகபுர
நகர்க்கு அரசன் சயந்தரன் என்பான். இவனுடைய நல்ல மனைவி விசாலநேத்திரை. இவர்களுடைய
புதல்வன் பெயர் சீதரன். இவனுக்கு வாய்த்த நல்ல அமைச்சன் நயந்தரன் என்னும்பெயருடையான்.
|