பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 18 -
‘இமிலேற்றைக் கண்டதால் உங்கட்கு இனிய புதல்வன் ஒருவன் பிறப்பான்.  இளங்கதிரைக்காண்டலால் அவன் இப்பாரெலாம் அடக்கியாண்டு பகரருந் தவந்தாங்கி இருவினையறுத்து வீடுபேறடைவான்’ என்றருளினார்.  அதைக் கேட்ட அரசன், ‘மூத்தாள் புதல்வன் இருக்க இளையாள் புதல்வனுக்கு அரசுரிமை உண்டாகுமோ?’ என்று ஐயுற்று, மீண்டும் முனிவரை வணங்கிக் கேட்கலானா
கம்பமில் நிலங்கள் எல்லாம் காத்தல்-குடிகள் எல்லாம் அச்சம் முதலியவற்றால் நடுங்குதலின்றி நாட்டை அமைதி நிலவ அரசாள்கை. கம்பம்-நடுக்கம்.                (5)

புதல்வன் பிறந்தபின் நிகழ்வன மன்னன் கேட்டல்

45. தனையன்வந் துதித்த பின்னைத் தகுகுறிப் புண்டோ வென்று
  புனைமல ரலங்கல் மார்பன் புரவலன் மற்றுங் கேட்ப
  நினைமினக் குறிக ளுண்டென் னேர்மையிற் கேட்பி ராயின்
  தினையனைப் பற்று மில்லாத் திகம்பர னியம்பு கின்றான்.

‘புத்திரன்வந்து பிறந்தபிறகு அத்துணைச் சிறப்பு அவன் அடைவான் என்பதற்குரிய அறிகுறிகள் யாதேனும் உண்டோ?’  என, தினையனைத்துங்கூட அகப்புறப்பற்றில்லாத அம் முனிவரர், ‘ஆம், உண்டு, கூறுகிறேன், கவனித்துக்கேட்டு அக்குறிகளைக் கண்டபின், யான் கூறியவை உண்மையென நினைவு கூர்மின்’ என்று கூறலுற்றார்.
   திகம்பரன்-(திக்-அம்பரா)-திசையே ஆடையாக வேறு ஆடை அணியாது வாழும் சமண
முனிவன். (6)

திகம்பர முனிவரின் மறுமொழி

வேறு

46. பொன்னெயிலுள் வீற்றிருக்கும் புனிதன் றிருக்கோயில்
  நின்சிறுவன் சரணத்தா னீங்குந் திருக்கதவம்
  நன்னாக வாவிதனின் னழுவப் பதமுண்டாம்
  மன்னாக மாவினொடு மதமடக்கிச் செலுத்திடுவான்.

சமவசரண மண்டலத்தில் வீற்றிருக்கின்ற ஜிநனுடையதும் நின் நந்தவனத்துள்ளதும் தினம் தேவர்களால் வழிபாடு செய்யப்படுவதுமான சித்தகூட சைத்தியாலயத்தின் மக்களால் திறக்கமுடியாத்  திருக்கதவம் உங்கள்