|
ஏவல் புரியும் வாயிற்காவலன், தங்கள் மகன் நாககுமாரன் தான் உலாவருகிறான் என, உடனே மன்னன் கோபங்கொண்டவனாய்,
நாம் பிரிதிவிதேவியிடம் இனி நாககுமாரன் நகர்ப்புறம் சென்று விளையாடக் கூடாது எனக்
கட்டளையிட்டதால், அவன் புகழ் உலகில் பரவுவதற்கு இல்லை எனக் கருதியே இங்ஙனம் பவனிவரும்படி
அவன் தாய் பிரிதிவிதேவி அவனைத் தூண்டிவிட்டிருக்கிறாள் போலும் என மனம் புழுங்கி,
‘என் கட்டளை மீறிய அவன் மனையிலுள்ள ஆடையணிகலன்களையும் பிற பொருள்களையும் விரைவிற்
சென்று சூறையாடி வம்மின்‘ எனத் தன் ஏவலரை ஏவினான். அவர்கள் சென்று அவ்வாறே அனைத்தையுங்
கொள்ளையடித்துக் கொண்டு வந்து அரசன் பொன்னறையில் சேர்த்தினார்கள்.
(29)
நாககுமாரன் அரசர்களுடன் சூதாடிப் பொருள் மிகக் கொணர்தல்
| 69.
|
ஆடுவா ரணமிசை யண்ணல்வந் திழிதர |
| |
நீடுமா ளிகையடைய நீர்மைநற்றாய் கூறலும் |
| |
ஆடுஞ்சூது மனைபுகுந் தரசர்தம்மை வென்றபின் |
| |
கூடுமா
பரணமே குமரன் கொண்டி யேகினான்.; |
வெற்றியானை
ஊர்ந்து உலாப்போந்த நாககுமாரன் பவனியை முடித்துவந்து தாயின் அரண்மனையில் இறங்கி
உட்புகுந்து பல பொருள்கள் களவாடப்பட்டிருத்தலையும் தாய் கழுத்தணிகளை இழந்து வருந்துதலையும்
கண்டு, ‘அம்மா யாது நிகழ்ந்தது‘ எனக் கேட்க, நடந்தவற்றைக் கூறி வருந்தினாள்.
நாககுமாரன், ‘அம்மா ஒன்றும் கவலை வேண்டாம், யான் உடனே சென்று, பல பொருள்களை
ஈட்டித் தருகிறேன்‘ எனத் தேற்றிவிட்டு வெளிப்போந்து, அந்நகரில் பல்லாயிரக்கணன்ககான
அரசர்கள் கூடிச் சூதாடும் ஓர் மனையுட் புகுந்து, அவர்களோடு சூதாடி முறையே வெற்றி கண்டு,
அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களை எல்லாம் கைக்கொண்டு போய்த் தன் தாயிடம்
கொடுத்தருளினான். தாய் மனம் மகிழ்ந்தாள். அரசனுடைய மந்திரி, புரோகிதர் முதலியோரும்
தத்தம் பொருள் இழந்தனர். (30)
அரசர்கள்
சயந்தரனிடம் முறையிடுதல்
|
70. |
அரசர்க
ளனைவரு மதிகரா சனைத்தொழ |
|
அரவமணி யாரமு மான முத்து மாலையும்
|
|
கரமதிற் கடகமுங் காய்பொற்கே யூரமும் |
|
வெரிமணிக
ளிலதைவேந் தென்னவிக் கூற்றென. |
|