சிலநாள்
சென்றபின் வியாளன்மட்டும் தனியே அந் நகரை விட்டு வெளிப்போந்து, நாககுமாரன் வாழும்
கனகபுரத்தை அடைந்தான். அச் சமயம் நாககுமாரன் யானைமீது ஏறி நகருலாப் போய் வந்து,
தன் மாளிகை முன்னே யானையினின்றும் இறங்கினான். அவனைக் கண்டபோதே வியாளனுடைய
நெற்றிக்கண் முற்றும் மறைந்தது. இதைக் கண்ட வியாளன் இவனே தனக்கு நாயகன் எனத்
துணிந்து வணங்கித் தன் வரலாற்றை விளக்கிக்கூறக் குமாரனும் குதூகலமடைந்தான்.
(8)
சீதரன்
ஏவிய சேனையை வியாளன் கம்பத்தால்
அடித்து மாய்த்தல்
82. |
செல்வனைக்
கொல்வ தென்று சிரீதரன் சேனை வந்து |
|
பல்சன மனையைச் சூழப் பண்புடை வியாளன் கண்டு |
|
வல்லைநீர் வந்த தென்ன வள்ளலை வதைக்க வென்றாா |
|
கொல்களி
யானைக் கம்பங் கொண்டுடன் சாடி னானே. |
நாககுமாரன்
நகருலாப்போந்த சிறப்பைக் கண்டு நகரம் வானளவாப் புகழ்ந்தது. அதைக் கேட்கக் கேட்க
சிரீதரனுடைய மனம் பொறாமையால் புழுங்கியது. இன்றே இவனைக் கொல்வேன் என வஞ்சினம்
கூறித் தன் படர்கள் ஐந்நூற்றுவரை ஏவினான். அவர்களும் விரைந்து நாககுமாரனுடைய மாளிகையைச்
சூழ்ந்து முற்றுகையிட்டனர். ஆங்கு நின்ற வியாளன் அவர்களைக் கண்டு விரைவில் திடீரென
நீவிர் போர்க்கோலங்கொள்ளக் காரணம் ஏன் என்று கேட்க, வள்ளலாகிய நாககுமாரனை
வதைக்க வந்தோம் என ஆர்ப்பரித்தனர் இக் கூற்றைக் கேட்ட வியாளன் வெகுண்டு சீறி,
அக்கணமே ஆங்கிருந்த யானை கட்டும் கம்பம் ஒன்றை ஈர்த்து அப்படர்களையெல்லாம் நையப்
புடைத்தான். அனைவரும் மாண்டொழிந்தார்கள். (9)
சீதரன்
வந்து நாககுமாரனை எதிர்த்தலும்,
அமைச்சர் வேண்டுதலால் போர் விடுத்தலும்
83. |
சேனைதன்
மரணங் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான் |
|
ஆனைமேற்
குமரன் றோன்றி யவனும்வந் தெதிர்த்த போது |
|
மானவேன் மன்னன் கேட்டு மந்திரி தன்னை யேவ |
|
கோனவர்
குமரற் கண்டு கொலைத் தொழி லொழித்த தன்றே. |
சேனைகள்
எல்லாம் மாண்ட செய்தியைக் கேட்ட சிரீதரன் சீற்றங்கொண்டவனாய்ப் போர்க் கோலங்கொண்டு
சென்று, நாககுமாரனைத்
|