வியந்தரதேவன்
நாககுமாரனுக்கு வாள் முதலியன கொடுத்தல்
95. |
வியந்தர
தேவன் வந்து வந்தனை செய்து நிற்ப |
|
விந்தநற் கிராதன் றேவி தனைவிடு வித்த பின்புச் |
|
சந்திர காந்தி வாளுஞ் சாலமிக் கமளி தானுங் |
|
கந்தநற்
காம மென்னுங் கரண்டகங் கொடுத்த தன்றே. |
உடனே ஓர் வியந்தரதேவன் வந்து நாககுமாரனுடைய பாதங்களைப் பணிந்து நின்று, ‘ஐயா!
நான் ஓர் கேவல ஞானியாரிடம் தருமம் கேட்கையில் என்னிடமுள்ள இச்சிறந்த
பொருட்கு உரியவர் யார் எனக் கேட்டேன். அதற்கு அவர், இவ் வேடன் கூக்குரலைக் கேட்டுப்
பரிந்துவரும் ஓர் ஆடவனுக்கே அது உரியதாகும் எனக் கூறினார். ஆதலால், இவ்வேடன் மனைவியைக்
கொண்டு போய்க் குகையில் வைத்துள்ளேன்‘ என உரைத்த பின் அவளை விடுவித்து, குமாரனைப்
பணிந்து, தன் வரலாற்றைக் கூறிச் சந்திரகாந்தம் எனும் வாளும், நாகசயனம் எனும் படுக்கையும்
காம கரண்டகமும் கொடுத்துச் சிறப்பித்தான்.
கரண்டகம்-சிறு
செப்பு, சிமிழ். இங்கே அரிய ஆபரணம் அடங்கிய சிறு பெட்டியைக் குறிக்கும்,அதாவது
அருங்கலச் செப்பு. (22) |
வேடன்
உரைத்த மலைக்குகை நாலாயிரவர் நாககுமாரனுக்கு அடிமையாதல்
96. |
அங்குநின்
றண்ணற் போந்து வதிசயங் கேட்ப வேடன் |
|
இங்குள மலைவா ரத்தி லிரணிய குகையுண் டென்னக் |
|
குங்கும மணிந்த மார்பன் குமரன்கேட் டங்குச் சென்றான் |
|
அங்குள
யியக்கி வந்து வடிபணிந் தினிது சொல்வாள். |
பெருமை மிக்க நாககுமாரன் அங்கு நின்றும் போந்து, அவ் வேடனைக் குறுகி, ‘இன்னும் இம்
மலையில் யாதேனும் அதிசயம் உளதோ?‘ என, அவ்வேடன், ‘ஐயனே இம் மலையடிவாரத்தில்
ஓர் இரணிய குகை உளது‘ என்று அதை அவற்குச் சுட்டிக் காட்டினான்.
|