‘ஐயனே!
அதோ வேதாளம் ஒன்று தன் கையில் வாளேந்திச் சுழற்றிக் கொண்டிருக்கிறது.
அதை அணுகுவோர் ஒருவரும் இல்லை‘ என்றான். உடனே நாககுமாரன் சென்று, அவ் வேதாளத்தின்
காலை ஈர்த்துப் பிளந்து தள்ளினான். ஆங்கே நிதிக்குவியலைக் கண்டான். அங்கே,
‘இவ் வேதாளத்தை வீழ்த்திய ஒருவருக்கே இந் நிதித்திரள் உரியதாகுக‘ என்றோர் சாசனம்
இருந்தது. அதைக் கண்டவுடன் முற்கூறிய தெய்வங்களை வேண்டி நினைக்க, அந் நாலாயிரம்
தெய்வங்களும் வந்து பணிந்து ஏவல் கேட்க, அவற்றை அந் நிதிக்குக் காவல் வைத்து விட்டு
அருகன் ஆலயம் போந்து, அருகனை வணங்கி மீண்டு, தானும் தன் மனைவி திரிபுவனாரதியும்
தோழனுமாக அங்கேயுள்ள ‘கிரிகூடபுரம்‘ என்னும் நகரத்தை அடைந்து, ஓர் ஆலமரத்தின்கீழ்
அமர்த்திருந்தான். (25)
கிரிகூடபுரத்தில்
நாககுமாரன் கணைவிழியை மணத்தல்
99. |
அந்நகர்க்
கதிப னான வனராசன் றேவி தானு |
|
மன்னிய முலையி னாள்பேர் வனமாலை மகணன் னாமம் |
|
நன்னுதற் கணைவிழியை நாகநற் குமர னுக்குப் |
|
பன்னரும்
வேள்வி தன்னாற் பார்த்திபன் கொடுத்த தன்றே. |
அந் நகருக்கு அதிபனான வனராஜனுக்கும் அவன் மனைவி வனமாலைக்கும் பிறந்து வயது வந்துள்ள
பிறைபோலும் நெற்றி அழகும் வேல்போன்று வருத்தும் விழியழகுமுடைய இலட்சுமிதேவி*
என்னும் கன்னியை நாககுமாரனுக்கு கூறுதற்கரிய வேள்வி விதிப்படி கலியாணம் செய்து வைத்தான்.
புண்ணியாசிரவ
கதையில் நாககுமாரன் ஆலமரத்தின்கீழ் அமர்ந்தபோது அம் மரத்துப் பிரஹோரங்கள்
(விழுதுகள்) புறப்பட அதனை ஆந்த்ரோளமாகச் (ஊஞ்சல்) செய்தனன். அப்போது அம் மரத்துக்குரியான்
வந்து வணங்கித் ‘தேவனே! இக் கிரி கூட நகரத்து வனராசனுக்கும் வனமாலைக்கும்
புத்திரி இலக்குமீமதி. இவளுக்குக் கணவன் யாவனொருவன் என்று அரசன் ஓர் அவதிஞானியைக்
கேட்க, அவரும், ‘இவ்வாலமரம் யாருடைய சமாகமத்து ப்ராரோஹம் (கைத் திறமையால் ஊசலாட்டம்)
உண்டாகுமோ அவனே பர்த்தா வாவான்‘ எனக் கூற, அதைக் கண்டு அறிவித்தற்கே என்னை
விட்டனர் என்று கூறி வனராசனுக்கு அறிவித்தாள் என்று உள்ளது.
(25)
--------------------------------------------------------------------------------
* |
கணைவிழி
என்றே பாடலுள் காணப்பெறுகிறது. |
|