பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 43 -

புண்டரபுரத்தை வனராசற்கு அளித்தல்

100. தாரணி வனரா சற்குத் தாயத்தா னொருவன் றன்னைச்
  சீரணி குமரன் றோழன் சிறந்தணி மாமன் கூடப்
  பாரணி வெற்றி கொண்டு புண்டர புரத்தை வாங்கி
  யேரணி வனரா சற்கு யெழில்பெறக் கொடுத்த வன்றே.

ஓர் நாள் நகர்புறத்தே தன் உய்யானத்தில் ஜயவிஜயர் என்னும் சாரணர் இருவர் வந்தமைகேட்டு, நாககுமாரன் சென்று வணங்கி, வனராசனுடைய குலம் யாது எனக் கேட்டான்.  ஐயர் என்னும் மூத்த முனிவர், ‘இப் புண்டரபுரத்தரசன் அபராஜிதன், அவன் தேவிமார் சத்தியவதி, சுந்தரி என்ற இருவர்.  இவர்கட்குப் புத்திரர் முறையே பீமன், மகா பீமன் என இருவர்.  அபராஜிதன் பீமனுக்கு அரசைக் கொடுத்துவிட்டுத் துறந்து நற்கதி அடைந்தான்.  பீமனோ மகாபீமனால் துரத்தப்பட்டு இங்கு வந்து நகர் அமைத்திருக்கின்றான்.  மகாபீமனுடைய புத்திரன் பீமாங்கன்,  அவனுடைய புத்திரன் சோமப்பிரபன். மகாபீமனுடைய பேரன் இப்பொழுது அரசாள் மன்னன் வனராஜன்,  சோம வம்சத்தில் பிறந்தவன்‘ எனக்கேட்டு மகிழ்ந்து வணங்கித் தொழுது மனை அடைந்தான்.  ஓர் நாள் சோம வமிசத்தைப் பற்றிய சிலாசாசனங்கண்டு புண்டரவர்த்தனபுரத்தை வனராஜனுக்கு உரிமையாகும்படி செய்வாயாக என வியாளனுக்குக் கூற, அவனும் தன் மாமன் ஜாயந்தரி என் பங்காளியோ என, ‘ஆம், அதற்கென்ன சந்தேகம்‘ என்றான்.  சோமபிரபன் வெகுண்டு, ‘அவ்வாறாயின் வனராசனுடன் யுத்த பூமியில் பெற்றுக் கொள்வானாக, என்று கடிந்துரைத்தான்.  வியாளனும், சோமப்பிரபனுடைய படைகளைக் கொன்று, சோமப்பிரபனைக் கட்டவிட்டு நாககுமாரனுக்கு அறிவிப்ப, குமாரனும் வந்து சோமப்பிரபனைக் கட்டவிழ்த்து விடுத்து புண்டரபுரத்தை வனராஜனுக்கு முடிசூட்டினான்.             (27)

நாடிழந்த சோமப்பிரபன் நற்றவம் செய்தல்

101. சொல்லரு நாடி ழந்து சோமநற் பிரபன் போகி
  யெல்லையிற் குணத்தின் மிக்க யெமதர ரடிவ ணங்கி
  நல்லருட் சுரந்த ளிக்கு நற்றவ முனிவ னாகி
  யொல்லையின் வினைகள் தீர யோகத்தைக் காத்து நின்றான்.