பக்கம் எண் :

Nagakumara Kavium
நாககுமார காவியம் - 47 -

புண்டரவர்த்தன புரத்தினின்றும் நாககுமாரனால் கட்டவிழ்த்து விடப்பட்டுச் சிறந்த தவமேற்கொண்ட சோமப்பிரப முனிவரும் எல்லையற்ற நற்குணவரிசை முற்னேற்றமுள்ள இருடிகள் பலரோடும் புகழ்மிக்க சுப்பிரதிட்டபுரத்தின் உய்யான வனத்தை விரும்பித் தங்கியிருந்தார்கள்.    (6)

108. செயவர் மன்சுதர் சீர்நற் றவர்களை
  நயம றிந்துசேர் நன்னடி யைப்பணிந்
  தியம்பு மிம்முனி யிப்ப துறந்ததென்
  செயந்த ரன்சுதன் சீற்றத்தி னானதே.

செயவருமன் குமாரர்களாகிய அசேத்திய அபேத்தியர் இருவரும் புகழ்மிக்க அவ் வருந்தவர்களைக் கண்டு வணங்கு முறை அறிந்து, அடி பணிந்து இறைஞ்சி, சோமப்பிரபரெனும் இம் முனிவர் இப்போது துறத்தற்குக் காரணம் யாது எனக் கேட்க, சயந்தர மன்னன் புதல்வன் நாககுமாரனுடைய சீற்றத்தினால் துறந்து தவமேற்கொண்டே மென்று நாககுமாரன் புகழை விளக்கிக் கூறினார்கள்.    (7)

செயவர்மன் புதல்வரிருவரும் நாககுமாரனை வந்தடைதல்

வேறு

109. என்றவ ருரையைக் கேட்டு இருவருந் துறந்து போந்து
  சென்றுநற் குமரன் றன்னைச் சீர்பெற வணங்கிச் சொன்னார்
  இன்றுமக் காள ரானோ மென்றவர் கூற நன்றென்
  குன்றுசூழ் வனசா லத்துக் குமரன்சென் றிருந்த வன்றே.

நாககுமாரனுடைய பெருமையைக் கேட்ட குமாரர்கள் இருவரும் அரசை அமைச்சன்பால் வைத்துப் புறப்பட்டுச் சென்று, புண்டரவர்த்தனபுரத்தை அடைந்து, குமாரனைக் கண்டு வணங்கி, இன்று முதல் யாங்கள் நினக்கு ஏவலாளர் ஆயினோம் என்று தங்கள் வரலாற்றைக் கூறினார்கள்.  குமாரனும் மகிழ்ந்து உடன்கொண்டு சென்று ஓர்நாள் குன்றைச் சூழ்ந்துள்ள ஜாலாந்தகம் எனும் வனத்து ஆலின் நிழலில் அமர்ந்திருந்தான்.        (8)

110. அடிமரத் திருப்ப வண்ண லந்நிழற் றிரித லின்றித்
  கடிகமழ் மார்பன் றன்னைக் காத்துட னிருப்பப் பின்னும்
  விடமரப் பழங்க ளெல்லாம் வியந்து நற்றுய்த் திருந்தார்
  கொடிமலர்க் காவு தன்னுட் கோமக னிருந்த போழ்தில்.