நல்வினை
மிக்க நாககுமாரன் அம்மரத்தடியில் தங்கியிருக்கும் போது அம்மர நிழல் வழக்கம் போல்
வெங்கதிரொளியால் மாறுபாடு எய்தல் இன்றி நிலையாக நின்று மணமிக்க வாகைமாலை சூடிய
அக் குமாரனை நிழல் தந்து பாதுகாத்திருக்கவும், அம்மரத்து நச்சுக் கனிகள் யாவும் வியக்கத்தக்க
அமுதக்கனிகளாக, அவைகளைத் தின்று ஆரோக்கியமாய் இருந்தனர். அங்ஙனம் அம் மலர்க்காவினுள்
கோமகன் இருந்த போதில்- (9)
ஆலநிழலிருந்தபோது ஐந்நூற்றுவர் வந்து குமரனைத் தலைவனாக
ஏற்றுக்கொள்ளல்
111. |
அஞ்சுநூற்
றுவர்கள் வந்தே யடிபணிந் தினிய கூறும் |
|
தஞ்சமா யெங்கட் கெல்லாந் தவமுனி குறியு ரைப்ப |
|
புஞ்சிய வனத்தி ருந்தோம் புரவல னின்னி டத்தின் |
|
நெஞ்சிலிற்
குறியன் காணா யெமக்குநீ றிறைவ னென்றார். |
ஐந்நூறு
படர்கள் வந்து குமாரனுடைய பாதங்களை வணங்கி இனிய சொற்களால், ‘தலைவ, அருந்தவ முனிவர்
ஒருவரைக் கேட்ப அவர் அவதி ஞானத்தால் அறிந்து, எங்கட்குப் புகலிடமாகிய தலைவர்,
ஜாலாந்தக வனத்து நச்சு மரக்கனிகள் யாருக்கு அமுதக் கனிகளாக மாறி இன்பங் கொடுக்குமோ,
மாறாத நிழலைத் தருமோ, அவரே என்றனர். நின் ஏவல் கேட்டு நடக்கக் காத்திருக்கிறோம்.
எங்கட்குத் தலைமகன் நீயே‘ என்றனர். (10)
கிரிநகரில்
குணவதியை நாககுமாரன் மணத்தல்
112. |
அரியநல்
லுரையைக் கேட்டு வவ்வணங் களிசிறந்து |
|
உரியநல் லவர்க ளோடு முவந்துட னெழுந்து சென்று |
|
கிரிநகர் தன்னைச்சேரக் கேட்டுநன் நகரைச் சென்றான் |
|
அரிவர
னெதிர்க் கொண் டேக யவன்மனை புகுந்தி ருந்தான். |
வாய்த்தற்கரிய
இந் நல்லுரையைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி யடைந்த குமாரன், ‘தோழர்களே!
உங்கள் விருப்பம் ஆகுக‘ என்று அவர்களோடும் சென்று அக்கிரிநகர் அரசன் சிம்மரதன்
எதிர் கொண்டு அழைப்ப, அவனுடைய அரண்மனையில் தங்கியிருக்கையில், அம் மன்னனால்
கீழ்க்கண்ட வரலாற்றைக் கேள்வியுற்று, அந்நகரை நோக்கிச் சென்றான். அதை அறிந்த
மன்னன் அரிவரனும் எதிர் கொண்டு அழைக்க ஆங்குத் தங்கலானான். (11)
|