122. |
வற்சையெனு
நாட்டினுள் வான்புகழுங் கௌசம்பி |
|
செற்றவரி னும்மிகு சூரன்சுப சந்திரன் |
|
வெற்புநிகர் கற்பினாள் வேந்தன்மகா தேவியும் |
|
நற்சுகா
வதியெனு நாமமினி தாயினாள். |
வத்சை
என்னும் தேயத்து வானவர் புகழும் கௌசாம்பி நகரத்தே பகைவரினும் மிக்க வீரன் சுபசந்திரன்
எனும் வேந்தன். சலியாத கற்புடைய அவன் மாதேவியும் பல நலம் பொதுளிய சுகாவதி எனும்
பெயரின ளாயினாள். (21)
123. |
அன்னவர்தம்
புத்திரிக ளானவேழு பேர்களாம் |
|
நன்சுயம் பிரபையும் நாகசுப் பிரபையு |
|
இன்பநற் பிரபையும் இலங்குசொர்ண மாலையும் |
|
நங்கைநற்
பதுமையு நாகதத்தை யென்பரே. |
அவர்களுடைய
புத்திரமார்கள் சுயம்பிரபையும், சுப்பிரபையும், சுநந்தையும், விளங்குகின்ற கனக மாலையும்,
நங்கையும், பதுமையும், நாகதத்தையும் என ஏழு பெயருடையவர்களாவார்கள். இவர்கள் நன்கு
வாழ்ந்து வருநாளில்-- (22)
124. |
வெள்ளியின்
மலையில் மேகவா கனன்றுரந்திடக் |
|
கள்ளவிழ் மாசுகண் டனவன் வந்துடன் |
|
கிள்ளையம் மொழியினாரைக் கேட்டுடன் பெறுகிலன் |
|
வெள்ளையங்
கொடிநகர வேந்தனை வதைத்தனன். |
வெள்ளியம்
பெருமலையின் தென்சேடியில் இரத்தின சஞ்சய புரவரசன் சுகண்டன், அவன்தன் வைரி மேகவாகனால்
துரத்தப்பட்டுக் கௌசாம்பி நகர்ப்புறத்தே துல்லங்கிபுரம் என்னும் நகர் அமைத்துக்
கொண்டிருந்தான். அவன் அக் கன்னியர்களைக் கேட்டான். சுபசந்திரன் கொடுக்க மறுத்தமையால்,
அவனைக் கொன்றுவிட்டுப் பெண்களைக் கவர முயன்றான். பெண்களோ, ‘நீ எங்கள் பிதாவைக்
கொன்றவனாதலால் உன்னை மணக்க மாட்டோம். உன்னைக் கொல்லும் ஒருவனையே மணப்போம்‘
என, அவர்களை இருட்டறையில் சிறையிட்டான். அவர்களி்ல் நாகதத்தை தப்பி வந்து
குருஜாங்கல தேயத்தில் அத்தினாபுரத்து அரசன் தன் பிதாவின் உடன் பிறந்தவனாதலின்
அவனுக்கு இதை அறிவித்தாள் என்றான். (23)
125. |
வேந்தனுக்
கிளையனுன்னை வேண்டியோலை யேதர |
|
சேர்ந்தவ னளித்தவோலை வாசகந் தெளிந்தபின் |
|
நாந்தக மயிற்கணை நலம்பெறத் திரித்துடன் |
|
போந்தவனைக்
கொன்றனன் பூவலங்கன் மார்பனே. |
|