மதுரையில்
சிரீமதியை இசைப்போட்டியில் வென்று நாககுமாரன்
பெறுதல்
132. |
மற்றுமொன்
றுரைத்தனன் மதுரைமா நகரியில் |
|
உற்றிருந்த சிரீமதி யோர்ந்துநா டகந்தனில் |
|
வெற்றிமுழ வேழ்வியம்ப வீறுடைய வல்லவன் |
|
பற்றுடன வள்பதியாம் பார்மிசைமே லென்றனன். |
இங்ஙனம்
இருப்ப, மகாவியாளன் மற்றும் ஓர் செய்தியையும் உரைப்பவனாய், ஐயனே பாண்டிய நாட்டுத்
தென்மதுரை எனும் நகரிலே ஆட்சிபுரியும் மேகவாகனன் மனைவி இலக்குமி மகள் சிரீமதி
என்பாள். அவள் தன் நடனத்துத் தன்னை மிருதங்க வாத்தியத்தால் யாவனொருவன் கூர்ந்து
வாசித்து வெற்றியடைவானோ அவனே தனக்குரிய நாயகனாவான் என வஞ்சினம் செய்துள்ளாள்
என அறிவித்தான். (31)
மதுரை
வந்த வணிகனிடம் நாககுமாரன் அவன் கண்ட அதிசயம்
இயம்பக் கேட்டல்
133. |
அங்குசென்றவ்
வண்ணலு மவளைவென்று கொண்டனன் |
|
பொங்குமிக் குழலியர்ப் புணர்ந்துட னிருந்தபின் |
|
வங்கமீது வந்தவோர் வணிகனை வினவுவான் |
|
எங்குள வதிசய மியம்புகநீ யென்றனன். |
அதைக்
கேட்டதும் மனம் மகிழ்ந்து அந் நகரை அடைந்து சிரீமதியை மிருதங்க வாத்திய இசைப்
போட்டியில் வென்று சுயவரத்தால் மாலை சூட்டப் பெற்று, மணந்து இனிதிருக்கும் நாளிலே,
அவ்வரசன் அவையில் கப்பல் வாணிகன் ஒருவன் வந்தான். அவனை நோக்கி, ‘வணிகனே,
நீ ஏதாவது அற்புத நிகழ்ச்சிகள் கண்டதுண்டோ? கண்டிருந்தால் கூறுவாய்‘ என்றான்.
(32)
வணிகன்
பூதிலகமாபுரத்து அதிசயம் கூறல்
134. |
பொங்குமாழி
யுள்ளொரு பூதிலக மாபுரம் |
|
புங்கவன்ற னாலையம் பொங்குசொன்ன வண்ணமுன் |
|
நங்கைமா ரைஞ்நூற்றுவர் நாடொறு மொலிசெய்வார் |
|
அங்கதற்குக் காரணம் யானறியே னென்றனன். |
அலை
பொங்கும் கடல் நடுவே பூமிதிலகமாபுரம் என்னும் பொன்மயமான வண்ணமிக்க புங்கவனுடைய
அருகன் ஆலயத்து முன்னே நாடோறும் நண்பகலிலே ஐந்நூறு விஞ்சையக் கன்னியர்கள் வந்து
ஓவென
|