ஒருமிக்க
அலறிப் பேரொலி செய்கின்றனர். அதற்குக் காரணம் யாது என யான் ஒன்றும் அறிகிற்றிலேன்
என்றான். (33)
நாககுமாரன்
அந்நகரம் சென்று சினாலயம் பணிந்து இருந்தமை
135. |
தனதுவித்தை
தன்னையே தானினைக்க வந்தபின் |
|
மனத்திசைந்த தோழரோடு வள்ளற்றீ பஞ்சென்றுநற் |
|
கனகமய வாலையங் கண்டுவலங் கொண்டுடன் |
|
சினனடி பணிந்துமுன் சிறந்துமிக் கிருந்தனர். |
அதைக்
கேட்ட குமாரன் தன் வித்தியா சக்தியால் தன் வித்தைகளை நினைந்தான். அவைகளும்
வந்தன. மற்றும் தனக்கு இச்சையான தோழர்களோடும் அவ் வள்ளலும் அத் தீவையடைந்து,
பொன்மயமான அச் சினாலயத்தைக் கண்டு, தொழுது வலங்கொண்டு பணிந்து துதித்தெழுந்துபோய்
ஆலயத்தின்முன் எதிர்பார்த்திருந்தான். (34)
ஆலயத்தின்
முன்வந்து ஐந்நூறு மங்கையர் அலற, அதன்
காரணம் குமாரன் வினாவுதல்
136. |
ஒருநிரையாய்
மங்கைய ரோசைசெய்யக் கேட்டபின் |
|
திருவலங்கன் மார்பினான் சேரவழைத் தவர்களை |
|
யருகனாலை யத்துமுன் னலறுநீங்கள் யாரெனத் |
|
தரணிசுந் தரியவ ளவற்கிதென்று கூறுவாள். |
உச்சிப்
போதில் அம் மங்கையர்கள் ஐந்நூறு பேரும் ஒரே வரிசையாக நின்று ஓவென்று அலறக்கேட்டு,
உடனே அழகிய மலர்மாலை அணிந்த குமாரனும் அவர்களை அழைத்து, அருகனாலயத்து முன்னே இவ்வேளையில்
வந்து அலறும் நீங்கள் யாவீர் எனக் கேட்க, அவர்களுள் தரணிசுந்தரி சொல்லலுற்றாள்.
(35)
ஐந்நூற்றுவருள்
தரணி சுந்தரி தங்கள் நிலையெடுத்துரைத்தல்
137. |
அரியவெள்ளி
மாமலை யாடுங்கொடி யேமிடை |
|
பிரிதிவி திலகமெங்கட் பேருடைய நன்னகர் |
|
வரதிரட் சகனேமர் தந்தையை மருகனுக்குக் |
|
கருதியெம்மைக் கேட்டனன் கண்ணவாயு வேகனே. |
ஐயனே!
அருமை சான்ற வெள்ளி மலைமிசை ஆடுங்கொடிகள் நெருங்கிய பிரிதிவீதிலகம்
என்னும் பேருடையது எங்கள் மாநகரம்.
|