எங்கள்
தந்தை வலதிரட்சகன் என்பான். வாயுவேகன் என்னும் எங்கள் அம்மான்-அழகற்றவன் அவன்-எங்கள்
தந்தையிடம் வந்து மருமகனுக்கு எங்களைக் கொடுக்கும்படி கேட்டான்.
(36)
138. |
எந்தையுங்
கொடாமையா லெரியென வெகுண்டனன் |
|
எந்தையை வதைசெய்து வெங்களையும் பற்றியே |
|
இந்தநல் வனத்திருந்தா னென்றவளுங் கூறலும் |
|
அந்தவாயு வேகனை யண்ணல்வதை செய்தனன். |
எங்கள்
தந்தை அதற்கு இசைந்து கொடாமையினால் கோபா வேசத்தால் வெகுண்டுவந்து போர்செய்து
தந்தையைக் கொன்று விட்டு, எங்கள் சகோதரர்களை நிலவறையிலிட்டு, வித்தை ஆற்றலால்
எங்களையும் பற்றிக்கொண்டு வந்து மணந்துகொள்ளும்படி கேட்டான். எங்கள் பிதாவைக்
கொன்ற உன்னைக் கொல்பவன் யாவன், அம் மகா புருஷனையே மணப்போம் என்றோம். என்னைக்
கொல்பவனை ஆறு மாதத்திற்குள் கொணர்க என்றான். ஆதலால் இவ் வனத்து இருட்டறையில்
அடைத்து வைத்துள்ளான். இவ்வாலய வழிபாட்டிற்கு வரும் ஆடவர்களுள் விஞ்சையர் யாரேனும்
எங்களுக்குப் புகலிடம் அளித்துப் போற்றுவார் என இங்ஙனம் அலறிக்கொண்டு வருகிறோம்
என்றாள். குமாரனும் அவனுடைய காவலரைக் கடிந்து தன் காவலரை நிறுவி, போருக்கு எழுந்து
ஆகாயத்து நின்று போராடி, முடிவாகச் சந்திரஹாசத்தால் வாயுவேகனைக் கொன்று இரட்ச
மகா இரட்சகர்கட்கு அரசைக் கொடுத்துவிட்டு அக் கன்னியர்களை மணஞ்செய்து கொண்டான். (37)
வாயுவேகனைக்
கொன்ற நாககுமாரன் நங்கையர் ஐந்நூற்றுவரை
மணந்து இன்புறுதல்
139. |
அஞ்சுநூற்று
மங்கையரை யண்ணல்வேள் வியாலெய்தி |
|
நெஞ்சிலன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்தபின் |
|
அஞ்சுநூற்று வர்படர்க ளாளராகி வந்தனர் |
|
தஞ்சமா யவர்தொழு தகமகிழ்ந்து செல்லுநாள். |
ஐந்நூறு
மங்கையரைப் பெருமை மிக்க குமாரன் வேள்வி முறையால் மணந்து, உள்ளன்போடு உவகைக்
கடலில் மூழ்கலானான். பின்னும் ஐந்நூறு படர்கள் தாமே வலிய வந்து, ‘ஐயனே!
யாங்கள் ஓர் அவதிஞான முனியைத் தொழுது எங்கட்கு இறைவன் யாவன் எனக் கேட்டோம்.
அவரும் வாய்வேகனைக் கொல்பவன் எவனோ அவனே உங்கட்கு நாயகனாவான் என்று அருளினார்.
|