அதனால்
இங்கிருந்தோம்‘ எனத் தஞ்சமடைய, நன்றென உளமகிழ்ந்து செல்கின்ற காலத்தே-
பிறகு
காஞ்சீபுரம் அடைந்து அந்நகர் அரசன் வல்லப நரேந்திரனால் வரவேற்பளிக்கப்பட்டு,
கன்னியர் தானம் முதலிய சிறப்புகளை அடைந்தான் என்கிறது வடமொழிக் காவியம்.
(38)
கலிங்கநாட்டு
அரசகுமாரி மதனமஞ்சிகையை
நாககுமாரன் கூடி மகிழ்தல்
140. |
கலிங்கமென்னு
நாட்டினுட் கனகமய விஞ்சிசூழ்ந் |
|
திலங்கு
ரத்னபுர மிந்நகர்க்கு மன்னவன் |
|
துலங்குசந்திர குப்தன் றோகைசந் திரம்மதி |
|
பெலங்கொளிவர் நன்மகட் பேர்மதன மஞ்சிகை. |
கலிங்கம்
என்னும் நாட்டில் பொன்மயமான மதிலாற் சூழப் பட்டு இலங்கும் இரத்தினபுரம். அந் நகருக்கு
அரசன் புகழ்மிக்க சந்திரகுப்தன் என்பான், இளமயிற் சாயலாளாகிய அவன் தேவி சந்திரமதி
என்பாள். இவர்களுடைய நற்புதல்வி மதனமஞ்சிகை என்னும் பெயருடையா ளாவாள். (39)
141. |
நாகநற்
குமரன் சென்று நன்மந்திர வேள்வியால் |
|
வாகன மினிதினின்று மதன்மஞ் சிகையொடுந் |
|
தாகமிக்
குடையனாய்த் தான்லயப் பருகினான் |
|
நாகநற்
புணர்ச்சிபோல் நன்குட னிருந்தரோ. |
மதனமஞ்சிகையின்
கட்டழகைக் கூறக்கேட்ட குமாரன் இனிது ஏறிச் செல்லும் வாகனம் இன்றி நடந்து சென்று அந்நகரை அடைந்தான். அவன் புகழைக் கேட்ட சந்திரகுப்த அரசனும் உள
மகிழ்ந்து, மதனமஞ்கிகையை மந்திரங்களைக் கூறி வேள்வி விதியால் கன்னியாதானமாகக் கொடுப்ப மணந்து, அவளோடும் பவணவாசிகளின் காதற்புணர்ச்சி போலக்
காதல் வேட்கை மிக்கவனாய் லயப்பட்டுப் புணர்ந்து மகிழ்ந்திருக்கலானான். (40)
கங்காளநாட்டு
அரசகுமாரி இலக்கணையை நாககுமாரன் பெற்றுப்
போகந் துய்த்தல்
142. |
கங்கைநீ
ரணிந்திலங்குங் கங்காளநன் னாட்டினுட் |
|
திங்கடவழ்
மாடநற் றிலகபுர மன்னவன் |
|
பொங்குமகு
டம்முடி பொற்புவிசை யந்தரன் |
|
இங்கித
மனைவிபேர் இயல்விசையை யென்பளே. |
|